கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் தான் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது 4வது ஐபிஎல் கோப்பையை வென்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முந்தைய சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியது. அந்தவகையில்,முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.
அதிரடி காட்டிய ஃபாஃப் டு பிளெசிஸ்:
அதன்படி, . ஃபாஃப் டு பிளெசிஸ் 59 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 86 ரன்களை குவித்தார், 27 பந்துகள் களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்தார். ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார். அதன்படி, 31 ரன்களை குவித்தார் மொயின் அலி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்களை குவித்தார்.
2021 இதே நாளில் கோப்பையை வென்ற சிஎஸ்கே:
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஸ் ஐயர் களம் இறங்கினார்கள். இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார் போல், சுப்மன் கில் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் எடுத்தார்.வெங்கடேஸ் ஐயர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 50 ரன்கள் குவித்தனர்.
முதல் விக்கெட்டை வெங்கடேஸ் பறிகொடுக்க கொல்கத்தா அணி 108 ரன்கள் எடுத்திருந்த போது 4 வது விக்கெட்டை சுப்மன் கில் பறிகொடுத்தார். இடையில் களம் இறங்கிய நிதிஷ் ராணா டக் அவுட் ஆகி வெளியேற சுனில் நரைன் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார்கள். 20 ஓவர்கள் முடிவில் கொகத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.