இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:


அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலுன் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


முன்னதாக கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய அணியின் மூத்த வீரர்கள் சென்னைக்கு வந்தனர். அதாவது பிசிசிஐ வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதகா பயிற்சி முகாம் ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின் உள்ளிட்டோர் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.


அதன்படி அனைவரும் சென்னை கடந்த மூன்று நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அதே முனைப்போடு இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது வங்கதேச அணி. இதனால் இந்த போட்டியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரிவர்ஸ் ஸ்வீப் பயிற்சியில் ரோஹித் ஷர்மா:






இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இது தொடர்பானபுகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர், நீண்ட நாட்களுக்குப் பிறகு விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் காண இறக்கிறார். ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.