இந்தியாவின் ஹிட்மேன் என்ற அடைமொழியுடன் இந்திய கிரிக்கெட் அணியில் வலம் வரும் ரோகித் சர்மா, மும்பை வோர்லி பகுதியில் தெருவோரம் ஹாயாக கிரிக்கெட் விளையாடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவைக் காண:






 


ரோகித் சர்மாவின் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக ஜொலித்து வருகிறார். ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்(264) அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கோலி ஓய்வில் இருந்தால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பையும் ஏற்று பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். 


ரோகித் பற்றி அறிந்ததும்; அறியாததும்: ரோகித்தின் தாயார் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கொஞ்சம் தெலுங்கும் பேசக்கூடியவர். அவர் பெரும்பாலும் சைவ உணவையே சாப்பிடுவார். இருந்தாலும் அவர் முட்டை பிரியர். அதுபோல் அவருக்கு தூக்கமும் ரொம்ப பிடிக்குமாம். அதனாலேயே ஒரு பேட்டியில் கோலி, ரோகித் சர்மாவை தூக்க பிரியர் என்று அழைத்திருப்பார். களத்தில் பந்துகளை விளாசும் ரோகித்துக்கு தன் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வதில் பொறுப்பில்லை எனக் கூறுகின்றனர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள். அவரது ஞாபக மறதிக்கு அளவே இல்லை எனக் கூறும் நட்பு வட்டாரம் ஒருமுறை அவர் திருமண மோதிரத்தை ஓட்டல் அறையில் மறந்து வைத்ததை சொல்லிக் காட்டுகின்றனர்.


ரோகித் சர்மா தனது நீண்டகால காதலி ரித்திக்காவை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிரிக்கெட் வீரர் தானே அதுமட்டும் தான் பிடிக்கு என்று நினைத்துவிடாதீர்கள். ஜெர்சி எண் 45 கொண்ட இவர் ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் தீவிர ஆதவாளர். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரோகித். அந்த பெருமை மட்டுமல்ல, ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் அடித்தவர். பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர். ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் போன்ற பெருமைகளையும் கொண்டவர்.


ஐபிஎல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன். டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற புகழும் அவருக்கு உண்டு. இவற்றையெல்லாம் கவுரவிக்கும் விதமாக ரோகித் சர்மாவுக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.  2017-ல் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்தார் ரோகித் சர்மா.