டி20 உலகக் கோப்பை:


ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணை நேற்று வெளியானது. அதன்படி, ஜூன் 1-ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கும் இந்த தொடர் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாச் நகரில் நிறைவு பெறுகிறது,


இதில், இந்திய அணி குருப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதன்படி, இந்திய அணி லீக் போட்டிகளை பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் மோதுகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.  முன்னதாக இந்த போட்டியானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. 


இதனிடையே, இந்த உலகக்கோப்பை தொடரின் அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான போஸ்டரை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.


போஸ்டரில் ஹர்திக் பாண்டியா:


இதில், ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.






கொந்தளித்த ரோஹித் ரசிகர்கள்:


இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை வெளியிடாமல் ஹர்திக் பாண்டியா இருப்பது ஏன் என்று ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், போஸ்டரில் உள்ள பாண்டியாவின் புகைப்படத்தை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவின் புகைப்படத்துடன் கூடிய புதிய புகைப்படத்தை பதிவிட வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.


முன்னதாக ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி ரோகித் சர்மாவின் தலைமையில் தான் விளையாடியது. ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்றது. இதனால் டி 20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!


மேலும் படிக்க: 2024 T20 World Cup: டி 20 உலகக் கோப்பை...”விராட் கோலியும் ரோகித் சர்மாவும்...” - இர்பான் பதான் சொன்ன அந்த வார்த்தை!