இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஹாங்காங் அணிக்கு எதிராக ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச டி 20 வடிவத்தில் 3500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


ரோஹித் சர்மாவுக்கு முன்பு, ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3500 ரன்களை கடந்தார். அதன்படி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 3531 ரன்கள் குவித்து ஒட்டுமொத்தமாக முதலிடத்தில் உள்ளார்.






டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் : 







  • டி20 போட்டிகளில் 3,500 ரன்களை கடந்த முதல் வீரர் ரோஹித்.

  • நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே டி 20 வடிவத்தில் 3,000 ரன்களை கடந்துள்ளனர். அதில்,மார்ட்டின் கப்டில் (3,497), விராட் கோலி (3,343), பால் ஸ்டிர்லிங் (3,011)

  • டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர் ரோஹித் (31).

  • ரோகித் 27 அரைசதங்கள் மற்றும் நான்கு சதங்கள் அடித்துள்ளார்.