உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 


2007- ம் ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானவர் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா. கிரிக்கெட் உலகக் கோப்பை திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா எப்போது மறக்க முடியாத இன்னிங்ஸ் கொடுப்பார் என்று எதிர்பாத்திருந்த ரசிகர்களுக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காத்திருப்பிற்கு விடை கிடைத்தது. ரோஹித் சர்மா பல நாட்களுக்கு பிறகு நன்றாக விளையாடி பல சாதனைகளை படைத்து நெகிழ்ச்சியான போட்டியாக மாற்றி விட்டார் ரோஹித்.


இந்தப் போட்டியில் ரோஹித் 78 பந்துகளில் சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர்களில் பட்டியலில் ரோஹித் முதல் இடத்தில் உள்ளார். 


உலகக் கோப்பை கிரிக்கெட் - அதிவேக சதம் அடித்த வீரர்கள் (100)


63  - ரோஹித் சர்மா Vs ஆப்கானிஸ்தான் -2023


81 - வீரேந்திர சேவாக் Vs பெர்முடா, 2007


83 - விராட் கோலி Vs பங்களாதேஷ், 2011


84 -ஷிகர் தவான் Vs அயர்லாந்து, 2015


84 - சச்சின் டெண்டுல்கர் Vs கென்யா,1999


ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோஹித் ஷர்மாவுக்குதான். இந்திய அணி வீரர்களில் உலகக் கோப்பை தொடரில் மாஸ்டர் ப்ளாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அதிக சதம் அடித்த வீரர் ரோஹித் ஷர்மா.


ரோஹித் சர்மா - ODI - உலகக் கோப்பை சதம்


2015- 1
2019- 5
2023- 1


ஹிட்மேன் என்று சொல்வதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று ரசிகர்கள் இவரின் சாதனையை கொண்டாடி வருகின்றனர். 


இதோடு, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன் கடந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்துள்ளார். குறைந்த இன்னிங்சில் 1000 ரன் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார். 


டேவிட வார்னர் (ஆஸ்திரேலியா)- 19 இன்னிங்ஸ்


ரோஹித் சர்மா (இந்தியா) - 19 இன்னிங்ஸ்


சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 20 இன்னிங்ஸ்


ஏ பி டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)  20 இன்னிங்ஸ்


ரோஹித் சர்மாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 31 சதம் அடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவிற்கு இது 29-வது சதம்.


கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய ரோகித்சர்மா இந்த போட்டியில் சதம் விளாசியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித்சர்மாவுக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த இஷன்கிஷன் 47 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 35 ஓவர்களிலே இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. கோலி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் ரன்ரேட்டும் உயர்ந்துள்ளது. 


ஆப்கானிஸ்தான் - இந்தியா போட்டி / கேப்டன் ரோகித் சர்மா சாதனைகள்


உலகக் கோப்பை போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் விளாசிய இந்திய வீரர் (19 போட்டிகள்)


உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் - 63 பந்துகள்


உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய வீரர் - 7 சதங்கள் 


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் - 473 போட்டிகளில் 556 சிக்ஸர்கள்