ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே இன்று காலமானார். அவருக்கு வயது 52. கிரிக்கெட் ஜாம்பவானான வார்னே, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ராட் மார்ஷும் இன்றுதான் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஷேன் வார்னே ட்விட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 12 மணி நேரத்திற்கு முன்புதான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை பதிவிட்டிருக்கிறார். இந்த நாள் முடிவதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் உயிரிழ்ந்திருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷேர் வார்னேவின் கடைசி ட்வீட்:
”ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. அவர் எங்கள் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர். இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார். ராட் கிரிக்கெட்டில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தவர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மீதும் அக்கறையாக இருந்தார். ரோஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு நிறைய எனது அன்பும் ஆதரவும். RIP நண்பா” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் இருந்த வார்னே, டாக்டர்கள் வந்து அவரை பரிசோதித்த போதே இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் தங்களை தனிமையில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்