டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்கிற எம்.எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார்.
இந்தியா vs இங்கிலாந்து:
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. டாஸை இழந்த இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகியோரின் சிறப்பான சதம் மற்றும் துணைக்கேப்டன் கேப்டன் ரிஷப் பண்ட்டின் அரைசதத்துடன் இந்திய அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 359/3 எடுத்திருந்தது.
ரிஷப் பண்ட் சாதனை:
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று பண்ட் தனது அதிரடியை தொடர்ந்தார், 146 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் தனது சதத்தை பண்ட் பூர்த்தி செய்தார். தனது 7வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த அவர் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ் தோனி 6 சதங்கள் அடித்திருந்தார்.
குருவை மிஞ்சிய சிஷ்யன்:
ரிஷப் பண்ட் அடித்த 7 சதங்களில் 5 வெளிநாட்டு மண்ணில் அடித்ததாகும், இதில் இங்கிலாந்தில் மட்டும் 3 சதங்களை அடித்துள்ளார் பண்ட். இதுமட்டுமில்லாமல் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
அடுத்தப்படியாக இந்திய அணிக்காக டெஸ்ட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பண்ட் மூன்றவாது இடத்தில் உள்ளார்(79 சிக்சர்கள்). முதல் இரண்டு இடத்தில் சேவாக்(90), ரோகித் சர்மா(88) உள்ளனர்.
ஆசியாவிற்கு வெளியே ஒரே இன்னிங்ஸ்சில் 3 சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்:
- கவாஸ்கர், ஸ்ரீகாந்த் & மொஹிந்தர் vs ஆஸ்திரேலியா சிட்னி 1986
- டிராவிட், டெண்டுல்கர் & கங்குலி vs இங்கிலாந்து ஹெட்டிங்லி 2002
- சேவாக், டிராவிட் & கைஃப் vs இங்கிலாந்து கிராஸ் ஐலெட் 2006
- ஜெய்ஸ்வால், கில் & பந்த் vs இங்கிலாந்து ஹெட்டிங்லி 2025