அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைதொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பல்வேறு நாடுகளில் நேரத்தை கழித்து வருகின்றனர். இதனிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்துள்ள சம்பவம் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


மாணவன் கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட்:


ரிஷப் பண்ட் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர். அண்மையில் கூட பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் என்னுடைய பதிவை லைக் செய்யும் எல்லோருக்கும் பரிசுகளை வழங்குவேன் என்று கூறி இருந்தார். அதேபோல் சமூக வலைதளங்களிலும் சில நல்ல காரியங்களை செய்து வருகிறார்.





அந்தவகையில் சமூக வலைதளமான எக்ஸ் மூலம் தன்னுடைய பொறியியல் கல்விக்கு பணம் தேவை படுவதாகவும் அதற்கு உதவி செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.






இதனைப்பார்த்த ரிஷப் பண்ட் அந்த மாணவருக்கு உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார். அதன்படி 90 ஆயிரம் ரூபாயை அந்த மாணவனுக்கு வங்கி கணக்கில் அனுப்பி உள்ளார் ரிஷப் பண்ட். கல்விக்காக உதவி செய்த ரிஷப் பண்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.