எப்பொழுதும் ஒரே ஒரு எம்.எஸ். தோனி மட்டுமே இந்திய அணிக்கு தலை சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார். அவர் என்றும் விலைமதிப்பற்றவர் என்று ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரசிகர்கள் தோனியின் ஒரு சில வீடியோக்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா- குசல் மெண்டிஸ் ஜோடி அபார தொடக்கம் தந்தனர்.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு கடைசி 16 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்றதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. புவனேஷ் வீசிய 19வது ஓவரில் இலங்கை கேப்டன் சனகா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தை ராஜபக்சே ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க 4 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தில் இலங்கை வீரர்கள் 2 ரன் எடுக்க, 3 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. 4வது பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், சனகா விட்ட பந்து நேராக விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கையில் தஞ்சம் அடைந்தது. இந்த அறிய வாய்ப்பை ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷீப்திப் சிங் தவறவிட இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் பல வீடியோ மாண்டேஜ்களை ரசிகர்கள் ட்விட்டரில் தற்போது தெறிக்கவிட்டு வருகின்றனர்.
2016 டி 20 உலகக்கோப்பை :
2016 ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி 20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 146 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் கடைசி 1 பந்து மீதமிருக்க 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 1 பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்திக் பாண்டியா பந்து வீச, தோனி தனது வலது கையுறைகளை கழற்றி ரெடியாக இருந்தார். பாண்டியா ஒரு ஃபுல்லர் பந்து வீசி பேட்ஸ்மேன் அடிக்க விடாமல் செய்தார். அதை லாபகமாக பிடித்த தோனி வேகமாக ஓடி வந்து முஸ்தாபிஸூரை ரன் அவுட் செய்தார். இதன் மூலம் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
அதேபோல், ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் ஒரு வேளை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது சஞ்சு சாம்சன் இந்த இடத்தில் இருந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.