ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், வர்ணனை செய்துகொண்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 3ஆவது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. அப்போது ரிக்கி பாண்டிங் வர்ணனையாளராக பணியில் இருந்தார்.  ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 


முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் பெர்த்தில் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 152.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


லபுஸ்சேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இரட்டை சதம் விளாசினர். அதிகபட்சமாக பிராத்வைட் 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.


இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


CSK : சிஎஸ்கே அணியின் புதிய பவுலிங் கோச் ஆன முன்னணி வீரர் யார் தெரியுமா மக்களே?


போட்டி நடைபெற்று கொண்டிருக்கையில் அவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.