உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போட்டியில் 252 ரன்கள் இலக்காக இந்தியப் அணி நிர்ணயித்துள்ளது,
இந்தியா - தென்னாப்ரிக்கா:
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவும், ஐந்தாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா அணிகளும் மோதி வருகின்றன. மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நல்ல தொடக்கம் வீணடிப்பு:
அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் களமிறங்கினர், இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து ஒரு நிலையான தொடக்கத்தை அளித்தது. மந்தனா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், பின்னர் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. இந்தியா 55 ரன்கள் வரை விக்கெட் வீழாமல் இருந்தது, ஆனால் அடுத்த 47 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் மோசமான ஃபார்மை இந்த போட்டியிலு தொடர்ந்த்ர்,, ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். ஃபார்மில் உள்ள ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவும் நான்கு ரன்கள் எடுத்த பிறகு வெளியேறினார்.
சிங்கப்பெண் ரிச்சா:
இந்தியா 102 ரன்கள் எடுத்திருந்தபோது ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் பேட்டிங் செய்ய வந்தார். ரிச்சா அமன்ஜோத் கவுருடன் சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தார், ஆனால் இந்திய அணி 153/7 என்கிற நிலையில் இருந்தது. . இதற்கிடையில், சினே ராணா இணைந்து அதிரடியாக விளையாடினார். ரிச்சாவும் சினே ராணாவும் 8 வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்து இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்து சென்றனர். சினே ராணா 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார், மறுபுறம் ரிச்சா 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து தனது சதத்தை நழுவவிட்டார்.
ஹாட்ரிக் வெற்றி நோக்கி இந்தியா?
252 ரன்கள் என்கிற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியும் தடுமாறி வருகிறது, அந்த அணி 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது
உலகக் கோப்பையில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்திலும், பின்னர் பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இப்போது, ரிச்சா கோஷின் வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ் இந்திய அணியை மூன்றாவது வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.