மதுரையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்த வைக்க எம்.எஸ்.தோனி மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது ரசிகர்களை அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

Continues below advertisement

 

மதுரையில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம்

தமிழகத்தின் மிக தொன்மையான நகரம் மதுரை. இந்த மதுரைக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த பட்டியலில் புதிதாக  ஒன்று இணைந்திருக்கிறது. அது தான் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம். தமிழ் நாட்டை பொறுத்த வரை சென்னையில் மட்டும் தான் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. இச்சூழலில் தான் மதுரையில் ஒரு பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் உருவாகியுள்ளது. தமிழக கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை கட்டிமுடித்திருக்கிறது. 

Continues below advertisement

மைதானம் எந்த இடத்தில் இருக்கிறது?

இந்த கிரிக்கெட் மைதானம் மதுரையில் உள்ள  சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 11.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. 

தல தோனி வருகை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி இன்று (அக்டோபர் 9) இந்த கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று மதியம் வருகை வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது கூடியிருந்த ரசிகர்கள் தோனி, தோனி என்று குரல் எழுப்பி உற்சாகபடுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே தவெக தலைவர் விஜய் மதுரைக்கு சென்ற போது அவருடைய தொண்டர்கள் விஜயை உற்சாகமாக வரவேற்ற வீடியோக்களை பகிர்ந்து அன்று தளபதி விஜய் இன்று தல தோனி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.