ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 9 முதல் 13 வரை முதல் டெஸ்ட் போட்டியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 1 முதல் 5 வரையிலும், நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9 முதல் 13 வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் வீரர்களும் நாக்பூர் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் காயம் காரணமாக 5 மாதங்களாக இந்திய அணியில் விளையாட முடியவில்லை. மீண்டும் இந்திய அணியின் ஜெர்சி அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பேசிய வீடியோவில், “ ஐந்து மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய இருக்கிறேன். இதனால், மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். இந்த பயணத்தில் நான் பல ஆண்டுகளாக பல ஏற்ற, இறக்கங்களை கண்டு வந்துள்ளேன். நீங்கள் ஒரு 5 மாதங்களாக கிரிக்கெட் விளையாட முடியாமல் போனால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாட போகிறோம் என்ற கவலை இருக்கும்.
அப்படிப்பட்ட மனநிலையில்தான் இருந்தேன். நான் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன். ஆனால், மீண்டும் இந்திய ஜெர்சியை அணிய வேண்டும் என்ற தூண்டுதல் மட்டுமே என்னை முன்னேற செய்தது” என்றார்.
ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023:
டெஸ்ட் தொடர்:
பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்
ஒருநாள் தொடர்:
மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்