ந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு முழுமையாக திரும்புகிறாரா? இல்லையா? என்பது குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் உட்பட இதுவரை யாரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இருப்பினும், சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா 17 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியுடன் இல்லை என்று இந்திய அணியின் தேர்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவாரா?
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது. அதே நேரத்தில் இந்த தொடருக்கான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளார். ஆனால், இதற்கு பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, ரவீந்திர ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு ஹோம் மேட்ச்சில் விளையாட வேண்டும் என்று கேட்டு கொண்டது. ஜடேஜா உண்மையில் உடல் தகுதியுடன் இருந்தால், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாகவும், ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பும் ஜடேஜா குறைந்தது ஒரு இன்னிங்ஸில் 30 முதல் 35 ஓவர்கள் வீச வேண்டி இருக்கும். எனவே, ஜடேஜா குறைந்தபட்சம் ஒரு சொந்த மண்ணில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு அணிக்கு எதிராக வருகிற ஜனவரி 24ம் தேதி ரவீந்திர ஜடேஜா, சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் விளையாடி தனது உடற்தகுதியை ரவீந்திர ஜடேஜா நிரூபிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023:
டெஸ்ட் தொடர்:
பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்
ஒருநாள் தொடர்:
மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
குறிப்பு: ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.
இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்