இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தொடரின் இரண்டாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அசாமின் குவஹாத்தியில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இன்று முதல் இந்திய அணியின் வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குவஹாத்தியில் பொன்னியின் செல்வன் தமிழில் எங்கு திரையிடப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார். 


 






இது தொடர்பாக ட்விட்டர் நண்பர்கள் கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவிற்கு ஒருவர் நாளை மதியம் 1.10 மணிக்கு ஒரு இடத்தில் பொன்னியின் செல்வன் படம் தமிழில் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அஷ்வின், “அந்த நேரத்தில் எனக்கு அணியின் பயிற்சி உள்ளது. வேறு எதாவது நேரங்களில் படம் இருந்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 


 




அவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.