Rashid Khan Marriage: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வீட்டில் டும் டும் - வைரல் வீடியோ!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் மற்றும் அவரது சகோதரர்கள் மூவருக்கு ஒரே நாளில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

Continues below advertisement

ஒரே நாளில் திருமணம்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரும் உலகின் முன்னணி ஆல்-ரவுண்டர்களுள் ஒருவர் ரஷித் கான். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவருக்கு உலக அளவில் பல ரசிகர்களும் உள்ளனர். இவரது திருமணம் ஆப்கானிஸ்தானின் காபூலில் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். ரஷித் கானுக்கு மட்டுமல்லாது, அவரது சகோதரர்களான ஆமிர் கலில், சகியுல்லா, ரசா கான் ஆகியோருக்கும் அதே நாளில் திருமணம் நடைபெற்றது.

Continues below advertisement

நால்வரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து வலம் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.  ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

வைரல் வீடியோ:

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் கான் அறிமுகம் ஆனார். மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக வலம் வந்த ரஷித் கான், பல் முக்கிய போட்டிகளில் அணி வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளார். ரஷித் கானின் தலைமையின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் அறிமுகமான ரஷித் கான், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

 

Continues below advertisement