ஐபிஎல் போட்டிகள் காரணமாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு ரஞ்சி டிராபி 2022 சீசனின் நாக் அவுட் போட்டிகள் தொடங்குகின்றன. ரஞ்சி கோப்பையின் நாக் அவுட் சுற்றில் எட்டு அணிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். ரஞ்சி டிராபி 2022-இன் காலிறுதிப் போட்டிகள் நாளை, ஜூன் 6, 2022 அன்று தொடங்கி நான்கு காலிறுதி, இரண்டு அரை இறுதி என நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி ஜூன் 22 அன்று நடைபெறுகிறது. 2022 ரஞ்சி டிராபியின் அனைத்து நாக் அவுட் போட்டிகளும் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
தகுதிபெற்ற அணிகள்
ஜூன் 6ஆம் தேதி தொடங்க உள்ள நாக் அவுட் சுற்றுக்கு லீக் போட்டியில் இருந்து, எட்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன. வங்காளம், ஜார்கண்ட், மும்பை, உத்தரகண்ட், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் 2022 ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கோவிட்-19 தொற்று அபாயத்தைத் தவிர்க்க பெங்களூருவில் மட்டும் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்கு? என்று? எந்த நேரத்தில்?
ரஞ்சி டிராபி 2022 நாக் அவுட் போட்டிகள் நாளை, ஜூன் 6 ஆம் தேதி, அதாவது திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறப்பட்டது போல, ரஞ்சி டிராபியின் முழு நாக் அவுட் கட்டமும் பெங்களூரில் விளையாடப்படுகிறது. சமீபத்திய விவரங்களின்படி, ரஞ்சி டிராபி 2022 நாக் அவுட் கட்டத்தின் இறுதிப் போட்டி உட்பட அனைத்து போட்டிகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ரஞ்சி டிராபி 2022 இன் அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 14, 2022 அன்று தொடங்க உள்ளன. இறுதிப் போட்டி ஜூன் 22 முதல் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
போட்டி அட்டவணை:
நேரடி ஒளிபரப்பு?
ரஞ்சி டிராபி 2022 நாக் அவுட் போட்டிகள், ஆங்கில கமென்ட்ரியில் Star Sports 2 மற்றும் Star Sports 2 HD இல் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும், அதிலும் பார்வையாளர்கள் பார்த்துக் கொள்ளலாம். 9.30க்கு போட்டிகள் துவங்குகின்றன, மாலை வரை நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் ஆப்பிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்