ஸ்ரீநகரைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான உம்ரான் மாலிக்கின் திறமையை ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.


2022-23 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது.
உம்ரான் மாலிக் 6 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக அக்டோபர் மாதம் முதல் தர போட்டியில் விளையாடினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு உம்ரான் மாலிக் மிகவும் பொருத்தமானவர் என்று ஜாஃபர் கூறினார்.


இதுதொடர்பாக வாசிம் ஜாஃபர் கூறியதாவது:
உம்ரான் மாலிக் 2022-23 ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஒரு பந்து வீச்சாளர். டி20 கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற மாலிக்கிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் கிடையாது.


6 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், மாலிக் 4.60 என்ற எகானமி விகிதத்தில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் கடைசியாக அக்டோபர் மாதம் சவுராஷ்டிராவுக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக விளையாடினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு மாலிக் மிகவும் பொருத்தமானவர்.


முந்தைய ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியபோதிலும் சர்ஃபராஸ் கானை இந்திய அணி இன்னும் அணியில் சேர்க்கவில்லை. முதல் 2 சீசனில் 1000 ரன்களை அவர் கடந்துள்ளார். இன்னும் இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இந்த சீசனில் அவர் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்க நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.






இவர்களைத் தவிர, யஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஷேக் ரஷீத் மற்றும் யாஷ் துல் ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட ஆட்டங்களில் இருந்தே கிரிக்கெட் வீரர்களாக உருவெடுத்துள்ளனர். இந்த சீசனில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் எப்படி விளையாடப் போகிறார் என்பதையும், ஷேக் ரஷீத், யஷ் துல் ஆகியோரின் பங்களிப்பையும் இந்த முறை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை தேர்வு செய்வது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம். ஆனால், அதற்காக குல்தீப் யாதவ், உத்தரப் பிரதேச அணிக்காக சிறப்பாக விளையாடி ஆக வேண்டும் என்றார் வாசிம் ஜாஃபர்.