2023ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ளது. கொச்சியில் நடைபெறும் இந்த ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 119 பேர் சர்வதேச போட்டிகளில் ஆடியவர்கள். 282 பேர் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்கள்.


தற்போது, ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியாகியுள்ளது. முக்கிய வீரர்களின் அடிப்படை விலையை கீழே காணலாம்.



  1. மயங்க் அகர்வால்      – 1 கோடி ரூபாய்

  2. அஜிங்க்யா ரகானே   – 1.5 கோடி ரூபாய்

  3. ரைலி ரோசாவ்             - 2 கோடி ரூபாய்

  4. கனே வில்லியம்சன்   – 2 கோடி ரூபாய்

  5. சாம் கரன்                  - 2 கோடி ரூபாய்

  6. கேமரூன் கிரீன்          - 2 கோடி ரூபாய்

  7. ஷகிப் அல் ஹசன்    - 1.5 கோடி ரூபாய்

  8. ஜேசன் ஹோல்டர்    - 2 கோடி ரூபாய்

  9. பென் ஸ்டோக்ஸ்     - 2 கோடி ரூபாய்

  10. டாம் பான்டன்         - 2 கோடி ரூபாய்

  11. ஹென்ரிக் கிளாசென் – 1 கோடி ரூபாய்

  12. நிகோலஸ் பூரன்       - 2 கோடி  ரூபாய்

  13. பில் சால்ட்                 - 2 கோடி ரூபாய்

  14. கிறிஸ் ஜோர்டன்     - 2 கோடி ரூபாய்

  15. ஆடம் மில்னே          - 2 கோடி ரூபாய்

  16. அடில் ரஷீத்               - 2 கோடி ரூபாய்

  17. ட்ராவிஸ் ஹெட்       - 2 கோடி ரூபாய்

  18. டேவிட் மலான்        - 1.5 கோடி ரூபாய்

  19. மணீஷ் பாண்டே  - 1 கோடி ரூபாய்

  20. ஜிம்மி நீஷம்          - 2 கோடி ரூபாய்

  21. பிரண்டன் கிங்     - 2 கோடி ரூபாய்


உள்பட பல வீரர்கள் அடிப்படை விலை 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக ரூபாய் 20 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வீரர்களுக்கு ரூபாய் 1.50 கோடியும், சில வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


பிரதான வீரர்களை அந்தந்த அணிகள் தங்களது அணியிலே தக்கவைத்துக்கொண்டுள்ளனர். சில வீரர்கள் ஏற்கனவே வேறு அணிகளுக்கு தேர்வாகிவிட்டனர். மயங்க் அகர்வால், பென்ஸ்டோக்ஸ், மணீஷ்பாண்டே, ஜிம்மி நீஷம், சாம் கரன் போன்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஏலத்திற்கு வந்துள்ளனர்.