Asia Cup 2023: இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகவும் மும்முரமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் போட்டித் தொடர்கள் என்றால் அது அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள ஐசிசி உலகக்கோப்பையும், இந்த மாதம் இறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்தான்.
இதற்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்திய இளம்படை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையில் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் நீண்ட காலமாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். இதனால் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட பல தொடர்களை இழந்ததற்கு பும்ரா இல்லாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு அவர் திரும்பியுள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக சிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்து ஓய்வு என இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளார் ராகுல் டிராவிட், அண்மையில் தெரிவித்துள்ளதாவது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு காயம் காரணமாக சிகிச்சையில் இருக்கும் சில வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, பும்ரா, கே.எல். ராகுல். ஸ்ரேயஸ் ஐயர் என மூவரும் அணிக்கு திரும்ப அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருநாள் போட்டித் தொடராக நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழு போட்டி அட்டவணை:
தேதி | குரூப் லீக் போட்டிகள் | இடம் |
ஆகஸ்ட் - 30 | பாகிஸ்தான் vs நேபாளம் | முல்தான் (பாகிஸ்தான்) |
ஆகஸ்ட் - 31 | வங்கதேசம் vs இலங்கை | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -2 | பாகிஸ்தான் vs இந்தியா | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -3 | வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -4 | இந்தியா vs நேபாளம் | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -5 | ஆப்கானிஸ்தான் vs இலங்கை | லாகூர் (பாகிஸ்தான்) |
சூப்பர் 4 சுற்றுகள் | ||
செப்டம்பர் -6 | A1 vs B2 | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -9 | B1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -10 | A1 vs A2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -12 | A2 vs B1 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -14 | A1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
இறுதிப்போட்டி | ||
செப்டம்பர் -17 | சூப்பர் 4 சுற்று - 1 vs 2 | கொழும்பு (இலங்கை) |