இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை குவித்தது. 77 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்க அணியை குயின்டின் டி காக்கும் – வான்டெர் டுசென்னும் இணைந்து வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.




சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான குயின்டின் டி காக் 130 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன்  124 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலமாக குயின்டின் டி காக் ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களை அடித்துள்ளார். இந்த சதத்தின் மூலமாக கிரிக்கெட் ஜாம்பவனும், முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டருமான ஜேக் காலீசின் சாதனையை சமன் செய்துள்ளார்.


ஜேக் காலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் ஆடி  17 சதங்களை அடித்துள்ளார். 53 முறை நாட் அவுட்டாகாமல் விளையாடிய ஜேக் காலீஸ் 11 ஆயிரத்து 579 ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 86 அரைசதங்களையும் அடித்துள்ளார். ஜேக் காலீஸ் சாதனையை குயின்டின் டி காக் 127 ஒருநாள் போட்டிகளில் சமன் செய்துள்ளார். அவர் 17 சதங்களுடன் 5 ஆயிரத்து 584 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 27 அரைசதங்களும் அடங்கும்.




சச்சின் டெண்டுல்கர் காலத்தில் சமகால வீரராக வலம் வந்து ஜேக் காலீஸ் அப்போது நம்பர் 1 ஆல் ரவுண்டராக வலம் வந்தார். ஜேக் காலீசின் சாதனையை சமன் செய்துள்ள குயின்டின் டி காக் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தார்.


இதன்படி, நடப்பு ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணிக்கு எதிராக குயின்டின் டி காக் சிறப்பாகவே ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணி சற்றுமுன் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 


மேலும் படிக்க : Ind vs SA, 1st Innings Highlights: குயின்டின் டி காக் சதம் : வான்டெர் டுசென் அரைதசம் - இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண