சரித்திரம் படைத்த வெஸ்ட் இண்டீஸ்:
ஆஸ்திரேலிய அணியின் சொந்த மண்ணில் 27 ஆண்டுகளுப் பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு, 216 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஆட்டநாயகன் விருது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமர் ஜோசப்க்கு வழங்கப்பட்டது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வெற்றி பெற்றது. அதன்பின்னர், தற்போதுதான் வெற்றி பெற்றது.
கண்ணீர் விட்டு அழுத ப்ரைன் லாரா:
இந்த போட்டியின் வர்னணையாளராக இருந்த வெஸ்ட் அணியின் ஜாம்பவான் ப்ரைன் லாரா போட்டியின் வெற்றியை வர்ணிக்க முடியாமல் உணர்ச்சிகளால் ஆனந்த கண்ணீர் விட்டார். அதேநேரம், “இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மிகப்பெரிய நாள். ஆஸ்திரேலியாவை 27 வருடங்கள் கழித்து தோற்கடித்துள்ளோம். அனுபவம் இல்லாத இளம் அணி சாதித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினார். அப்போது அருகிலிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பயிற்சியாளராக இருக்கும் மற்றொரு முன்னாள் நட்சத்திர வீரர் கார்ல் கூப்பர் தன்னுடைய தலைமையில் இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற வெற்றியை பார்த்து அழுதார்.
மேலும் படிக்க: Joe Root: எடுத்தது 2 ரன்கள்.. ஆனால் முறியடிக்கப்பட்டது 12 ஆண்டுகள் சாதனை; ஜோ ரூட் செய்த தரமான சம்பவம்
மேலும் படிக்க: IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்... கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!