கத்துக்குட்டி அணிகளிடம் தொடர் தோல்வி:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூன் 6) நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்தது முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணி.


கத்துக்குட்டியான அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே மற்றும் அண்மையில் நடைபெற்ற டி20 போட்டியில் அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.


தொடர்ந்து கத்துக்குட்டி அணிகளிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வருவதால் சமூக வலைதளங்களில் அந்த அணியை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். 


இரவு விருந்தை ஒத்திவைத்த பாகிஸ்தான் அணி:






இந்நிலையில் தான் ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்றை பாகிஸ்தான் அணி இன்று ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்க அணியை வீழ்த்திவிட்டால் இரவு உணவுக்கு அந்த அணி நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்து இருந்தது.


ஆனால் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்ததால் இரவு விருந்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்துகொள்ளவில்லையாம். அந்நாட்டு வீரர்கள் சோகத்தில் இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த இரவு விருந்தை பின்னர் ஒரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று ஒத்திவைத்துவிட்டதாம். 


பாகிஸ்தான் இந்தியா போட்டி எப்போது?


பாகிஸ்தான் அணி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவை எதிர்கொள்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்நிலையில்தான் ஜூன் 9-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்குகின்றனர் இந்திய அணி வீரர்கள்.


இந்தப் போட்டி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தன் எப்படி விளையாடும் என்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க: T20 World Cup: மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!


மேலும் படிக்க: T20 World Cup 2024: டி20 கேப்டனாக ’ஹிட் மேன்’ ரோஹித் ஷர்மாவின் சாதனை! விவரம் உள்ளே!