உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.
2021-22ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை தன்வசமாக்கியது. 4 வது போட்டியில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து அணி டிரா செய்தது.
இந்தநிலையில், இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான 5 மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 14 ம் தேதி ஹோபர்ட்டில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 101 ரன்களும், கிரீன் 74 ரன்களும் எடுத்திருந்தனர். அதனைதொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 124 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கோப்பையை பெற்றபோது அவர் செய்ய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்லாம் தடைசெய்யப்பட்ட சில விஷயங்களில் மதுவும் ஒன்று. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கோப்பையை பெற்றபோது ஷாம்பியன் பாட்டிலை குலுக்க தயாராக இருந்தனர். கவாஜா ஒரு முஸ்லீம் என்பதால் அதில் இருந்து விலகி ஓரமாக நின்றார். இதைபார்த்த பேட் கம்மின்ஸ் தனது அணி வீரர்களிடம் ஷாம்பியன் பாட்டிலை குலுக்க வேண்டாம் என்று தெரிவித்து கவாஜாவை அணியினரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்