நெதர்லாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதற்கான முதல் போட்டியில் (இன்று) ஆகஸ்ட் 16 ம் தேதி ராட்டர்டாமில் உள்ள ஹாஸலார்வெக்கில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். போட்டி தொடங்கிய சில நொடிகளிலேயே இமாம்-உல்-ஹக் 2 ரன்களில் வெளியேறினார். ஃபக்கர் ஜமானுடன் இணைந்த பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை மீட்க போராடினர். 






ஃபக்கர் ஜமான் ஆரம்பம் முதல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 109 பந்துகளில் 109 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் விக்கெட்களை விடாமல் இருக்க, முதலில் 42 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்த தான் விளையாடிய பந்துகளை அதிரடியாக விரட்ட தொடங்கினார். 


பாபர் அசாம் 58 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 85 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 74 ரன்களில் வெளியேறினார். 


முதலில் பொறுமையாக இன்னிங்ஸை தொடங்கிய உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் எதிரணி பந்துகளை சந்திக்க திணறினார். பின்பு மீண்டெழுந்த பாபர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் இதுதான் நம்பர் 1 பேட்ஸ்மேனுக்கான மேனரிசம். ஆரம்பத்தில் சொதப்பினாலும் பின்பு கெத்துகாட்டி அசத்த தொடங்கினார்.






தற்போது நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 46 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து, தொடர்ந்து விளையாடி வருகிறது. 


உலக கிரிக்கெட்டில் பாபர் அசாமின் திறமை குறித்து இப்போதும் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்து வகையான போட்டிகளிலும் மற்றும் அனைத்து வகையான பந்து வீச்சாளர்களுக்கும் எதிராக பாகிஸ்தான் கேப்டன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர்ந்துஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டு வடிவங்களிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில் விரைவில் டெஸ்ட் போட்டியிலும் நம்பர் 1 இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.