ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


மேற்கண்ட அனைத்து 5 நாடுகளும் ஏற்கனவே ஆசிய கோப்பையில் தகுதி பெற்றதால், ஏ பிரிவில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு 4 நாடுகள் போட்டியிட இருக்கின்றனர். 






இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி. அயர்லாந்து டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷரபுதீன் அஷ்ரஃபுக்கு பதிலாக சமியுல்லா ஷின்வாரி சேர்க்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து தலைமை தேர்வாளர் நூர் மாலிக்சாய் கூறுகையில், “ஆசியா கோப்பை எங்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். எனவே, இந்த தொடருக்கு எங்களின் சிறந்த வீரர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். சமியுல்லா ஷின்வாரி ஆசிய கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மிகவும் நல்ல பார்மில் உள்ளார். ஏற்கனவே இப்ராஹிம் சத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, நஜிபுல்லா சத்ரான் மற்றும் முகமது நபி ஆகியோரைக் கொண்ட பேட்டிங் ஆர்டருக்கு மேலும் வலுசேர்க்க முடியும். மார்ச் 2020க்குப் பிறகு ஷின்வாரி எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை, ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஷ்பகீசா கிரிக்கெட் லீக் 2022ல் அவர் சிறப்பாகச் செயல்பட்டு, எங்கள் மிடில் ஆர்டரை வலுப்படுத்த அவர் ஒரு சிறந்த வழி என்பதை நிரூபிப்போம். 


அயர்லாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஆப்கானிஸ்தான் தற்போது அயர்லாந்தில் விளையாடி வருகிறது. புதன்கிழமை அயர்லாந்துக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் போட்டிக்குப் பிறகு, ஆசியக் கோப்பைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி புறப்பட இருக்கிறது. 


ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி : முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா சத்ரான் (துணை கேப்டன்), அஃப்சர் ஜசாய் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ஃபரித் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, ஹஸ்ரதுல்லா ஜசாய், இப்ராஹிம் ஜசாய், இப்ராஹிம் ஜசாய், இப்ராஹிம் , நஜிபுல்லா சத்ரான், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ரஷித் கான் மற்றும் சமியுல்லா ஷின்வாரி. நிஜாத் மசூத், கைஸ் அஹ்மத் மற்றும் ஷரபுதீன் அஷ்ரஃப் ஆகிய மூன்று வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண