ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இன்று மோத இருக்கின்றனர். போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. செப்டம்பர் 9 ஆம் தேதி துபாயில் நடந்த இறுதி சூப்பர் 6 போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து 122 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 









டி 20 போட்டிகளில் நேருக்கு நேர் : 



  • விளையாடிய போட்டிகள் - 22

  • இலங்கை வெற்றி – 9

  • பாகிஸ்தான் வெற்றி – 13

  • இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் – சோயப் மாலிக் (397 ரன்கள்)

  • இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த வீரர் - ஷாஹித் அப்ரிடி / சயீத் அஜ்மல் (14 விக்கெட்கள்)

  • பாகிஸ்தான் எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் - திலகரத்ன டில்ஷான் (232 ரன்கள்)

  • இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த வீரர் - லசித் மலிங்கா (16 விக்கெட்கள்)


ஆசிய கோப்பை: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் : 



  • விளையாடிய போட்டிகள் - 16

  • இலங்கை வெற்றி – 11

  • பாகிஸ்தான் வெற்றி – 5


ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இலங்கை (1986, 2014) இரண்டு முறையும், பாகிஸ்தான் அணி 2000 ம் ஆண்டு ஒருமுறை வென்றது. கடந்த 2014 ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் விளையாடுவது இதுவே முதல் முறை.