PAK vs NEP Asia Cup 2023 LIVE: 238 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி.. அசத்தலாக ஆசிய கோப்பையை தொடங்கிய பாகிஸ்தான்..!
PAK vs NEP Asia Cup 2023 LIVE Score: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.போட்டி குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கே காணலாம்.
ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
343 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள நேபாள அணி 3 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆசியக்கோப்பை 2023 முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.
பாபர் அசாம் 110 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த நிலையில், இப்திகார் அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது பாகிஸ்தான் 45 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்துள்ளது.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தாலும் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அஸாம் பொறுப்பான ஆட்டத்தால் அரைசதம் அடித்து சிறப்பாக ஆடி வருகிறார்.
பாகிஸ்தான் அணி தனது 4வது விக்கெட்டை இழந்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்த பின்னரும் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்து வருவதால், 21 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து சிறப்பாக ஆடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் சேர்த்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை பாபர் அஸாமும், ரிஸ்வானும் சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்து மீட்டு வருகின்றனர்.
16 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 75 ரன்களை எட்டியுள்ளது.
அரைசதத்தைக் கடந்து பாகிஸ்தான் அணி நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்களை பாகிஸ்தான் அணி இழந்துள்ளதால் மிகவும் நிதானமாகவே ரன்கள் சேர்த்து வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹாக் நேபாளம் அணியின் ரோகித் பௌதேல் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டதால் வெளியேறினார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமானின் விக்கெட்டை நேபாளம் அணியின் ஆசிஃப் ஷேக் கைப்பற்றி அசத்தினார். ஃபக்கர் ஜமான் 20 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
5 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தினை ஆடி வருகின்றனர்.
நேபாளத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.
நேபாளத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
PAK vs NEP Asia Cup 2023 LIVE Score
ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது இன்று தொடங்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் செயலியிலும் இலவசமாக கண்டு களிக்கலாம்.
இரண்டு நாடுகளில் தொடர்..!
முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஒரு சிறு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டியும் இலங்கையிலேயே நடைபெறும்.
இரண்டு சுற்றுகள்:
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
அதில் ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. முகல் நகரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி:
இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வரும் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
உலகக்கோப்பைக்கு தயாராக ஏதுவாக இந்த தொடர் அமைந்து உள்ளதால், இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரின் செயல்பாட்டின் மீதும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், அவர்கள் இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்
யார் முன்னிலை:
ஆசியாவில் இடம்பெற்றுள்ள அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதலில் 50 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்ட இந்த தொடர், டி-20 பிரபலமானதை தொடர்ந்து டி-20 வகையிலும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த தொடர் நடைபெறுகிறது. இதுவரை 14 முறை ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 முறையும், இலங்கை அணி 6 முறையும் இந்த கோப்பயை வென்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -