இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் 26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தை பொறுப்பேற்கச் வேண்டும் என , முன்னாள் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா தனது நாட்டு அரசாங்கத்தை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் கனேரியா, தனது எ, அதில் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) நிழல் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது மெளனத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன? ஏனென்றால் ஆழமாக, உங்களுக்கு உண்மை தெரியும் நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். வெட்கமாக இருக்கிறது, என்று கனேரியா பதிவிட்டுள்ளார்

முகமது ஹபீஸ்:

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தனது மௌனத்தை உடைத்து கலைத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் , "சோகமும் மனவேதனையும்" என்று இரண்டு வார்த்தைகளில் ட்வீட் செய்தார். இந்தப் பதிவு விரைவில் வைரலாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, 

இவர்கள் இருவரின் கருத்துக்கு ஒரு சில தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் வீரர்கள்: 

இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். விராட் கோலி இந்த தாக்குதலை "மிகவும் கவலையளிக்கிறது" என்று கூறினார், அதே நேரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், "இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள். குற்றவாளிகள் விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்தியா பதிலடி கொடுக்கும்" என்று எழுதினார்.

சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், இர்பான் பதான் உள்ளிட்ட பிற கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.