இந்திய அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்குடன் திருமணம் செய்து கொண்டார்.


இந்திய வேகப்பந்து வீச்சாளர், திவ்யா சிங் என்ற பெண்ணை (நவம்பர் 29) நேற்று திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் முதல் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இடம்பெற்றுள்ள முகேஷ் குமார், கோரக்பூரில் தனது திருமண விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு போட்டிகளில் பங்கேற்ற பிறகு தற்காலிகமாக ஒரு போட்டியில் இருந்து விலகினார். 


இந்தநிலையில், திருமணத்திற்கு பிறகு முகேஷ் குமாரும், திவ்யா சிங்கும் போஜ்புரி பாடலான  'லாலிபாப் லாகே லு' க்கு நடனமாக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






2023 இல் இந்திய அணிக்காக அறிமுகமான முகேஷ் குமார், தனது காதலியான திவ்யா சிங்குடன் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.


முகேஷ் குமாரின் திருமணம் எங்கு நடந்தது?


 முகேஷ் குமாரின் திருமணம் கோரக்பூரில் நடைபெற்றது. சதார் தொகுதியில் உள்ள ககர்குண்ட் கிராமத்தில் இருந்து கோரக்பூருக்கு திருமண ஊர்வலமாக வந்து திருமணமானது ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது. முகேஷின் கிராமமான ககர்குண்டில் டிசம்பர் 4 ஆம் தேதி வரவேற்பு விழாவும் நடைபெற உள்ளது.


யார் இந்த திவ்யா சிங்..?


முகேஷ் குமார் தனது குழந்தை பருவ தோழியும், காதலியுமான திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். பீகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பனியாபூர் பேருய் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் திவ்யா.


மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முகேஷ் குமார்..?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முகேஷ் குமார் பெயர் இடம் பெற்றிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் தனது திருமணத்திற்காக மட்டும் பிசிசிஐயிடம் இருந்து கவுகாத்தியில் நடந்த மூன்றாவது போட்டியில் இருந்து விடுப்பு எடுத்திருந்தார். இருப்பினும், டிசம்பர் 01 வெள்ளிக்கிழமை அதாவது நாளை ராய்பூரில் நடைபெறும் நான்காவது போட்டியில் இருந்து இந்திய அணியுடன் இணைவார். முகேஷ் குமார் இல்லாததால், தீபர் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது தீபக் சாஹரும் முழு தொடரிலும் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருப்பார். 


ஒரே ஆண்டில் ஐபிஎல் மற்றும் சர்வதேச அறிமுகம்: 


முகேஷ் குமார் 2023ல் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.  வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின்போது முகேஷ் குமார் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அறிமுகமானார். இதுவரை 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 7 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு விளையாடிய 2023 ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முகேஷ் குமாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. 2023 மினி ஏலத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 5.50 கோடிக்கு முகேஷ் குமாரை வாங்கி, 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.