டி20 உலகக் கோப்பை 2019 ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இதே நாளில் தான் ஒரு அதிசய கேட்ச்சை பிடித்தார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகள் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை சீசனில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க உட்பட மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
2019 ஆம் ஆண்டு இதே நாளில் நடந்த சம்பவம்:
கடந்த 2019 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை டி20 சீசன் 7. அந்தவகையில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பென் ஸ்டோக்ஸ் ஒரு அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்தார்.
முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் இறுதியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றியும் பெற்றது.
அதாவது இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய், ரூட், மார்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதங்களை கடந்தனர். அதன்பின் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி மிக மோசமாக திணறியது. தொடக்கத்தில் இருந்தே அந்த அணி தங்களது மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
பென் ஸ்டோக்ஸ் பிடித்த அதிசய கேட்ச்:
தென்னாப்பிரிக்க அணி 250 ரன்களை கூட தாண்ட முடியாமல் திணறிய போது தான் ஒரு அதிசயம் நடந்தது. அது தென்னாப்பிரிக்க அணிக்கு ஆதரவான அதிசயம் அல்ல இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக நடந்த அதிசயம் அது.
அதாவது 34.1வது ஓவரில் அடில் ரஷீத் களமிறங்கி பந்து வீசினார். அந்த ஓவரில் அவர் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் நினைத்தது போலவே தென்னாப்பிரிக்கா வீரர் ஆண்டில் பெலுக் வாயோ சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து ஸ்விங் ஆனதில் அவரால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை.
அப்போதுதான் திடீர் என்று உள்ளே எகிறி குதித்து வந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பவுண்டரில் லைனுக்கு அருகே பந்தை ஒற்றைக் கையில் பிடித்தார். ஒற்றைக் கையில் பிடித்தது மட்டுமில்லாமல், டைவ் அடித்து, உருண்டு விழுந்தார். இது மிக மிக கடினமான கேட்ச்களில் ஒன்றாக மாறியது. இதே நாளில் தான் அவர் இந்த கேட்ச்சை பிடித்தார் என்பது அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.