முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கடந்த சில நாட்களாக கிரிக்கெட்டில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார். ஏனென்றால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நெஹ்ரா வரலாம் என்று கூறப்படுகிறது. 


இவர், தற்போது முன்னாள் பந்துவீச்சாளர் நெஹ்ரா, ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி பங்கேற்ற முதல் சீசனிலேயே நெஹ்ராவின் பயிற்சியின் கீழ் பட்டம் வென்றது. இதற்குப் பிறகு, ஐபிஎல் உரிமையானது அடுத்த சீசனில் அதாவது 2023 இல் இறுதிப் போட்டியை எட்டியது. 


இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் வருகின்ற நவம்பரில் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து, தனது பதவியை நீட்டிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளராக நெஹ்ரா பயிற்சியாளர் ஆவார் என்று சொல்லப்படுகிறது.


முன்னதாக 'பிடிஐ' செய்தி நிறுவன அறிக்கையின்படி, ஆஷிஷ் நெஹ்ரா இந்தியாவின் பயிற்சியாளராக ஆவதில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஏனெனில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் 2025 இறுதி வரை ஒப்பந்தம் செய்துள்ளார் நெஹ்ரா. 






பிடிஐயிடம் பேசிய பிசிசிஐயின் முன்னாள் அதிகாரி ஒருவர், “இந்தியா உலகக் கோப்பையை வென்றதாக வைத்துக்கொள்வோம், டிராவிட் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை, ஏனெனில் அவர் தனது பதவிக்காலத்தை நன்றாக முடிக்க விரும்புகிறார். ஆனால் என்னைக் கேட்டால், உலகக் கோப்பைக்குப் பிறகு, பிசிசிஐ ஒவ்வொரு வடிவத்திற்கும் வெவ்வேறு பயிற்சியாளர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிவப்பு பந்து பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டைத் தொடர பிசிசிஐ கோரிக்கை வைக்க வேண்டும்” என்றார்”.


டிராவிட்டுக்கு முன்பு பயிற்சியாளராக யார் இருந்தார்..? 


ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்ததும், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஸ்டேட்டிலிருந்து வெளியேறிய பிறகு ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைந்தது. பின்னர் நவம்பர் 2021ல் இந்த பொறுப்பு ராகுல் டிராவிட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பாரா அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாராவது இருப்பார்களா என்பது நவம்பருக்கு பிறகே தெரியவரும்.






தற்போது அறிவிக்கப்பட்ட ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் கூட இல்லாதது கேள்வியை எழுப்பி வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு கோப்பையை வென்ற உலகக் கோப்பை இந்திய அணியில் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் இடம் பெற்றிருந்தனர்.