ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 4 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 7) டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இலங்கை அணி மோதியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ராம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை செய்து முடித்துள்ளார். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்:
அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரர்கள்:
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா ஆகியோர் களமிறங்கினர். இதில் பவுமா 5 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் குயின்டன் டி காக் ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குயின்டன் டி காக் 84 பந்துகளிக் சதம் விளாசினார். அந்த வகையில், 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 100 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்தை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்த வான்டெர்டுசென் 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் விளாசினார். மேலும் 3 சிக்ஸர்களுடன் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சூறாவளியாய் சுழன்ற ஐடன் மார்க்ராம்:
அடுத்ததாக களம் கண்ட ஐடன் மார்க்ராம் ஒரு சூறாவளி போல் சுழன்று இலங்கை அணியின் பந்துவீச்சை கிழித்து தொங்கவிட்டார். அவர், 49 பந்துகளில் சதம் அடித்தார். மொத்தம் 54 பந்துகள் களத்தில் நின்ற அவர் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 106 ரன்கள் எடுத்தார்.
அதிவேக சதம்:
அந்த வகையில் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை புரிந்தார். ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 48 ஆண்டுகளில் நடைபெற்ற 450 போட்டிகளில் இது தான் அதிவேக சதம் என்ற சாதனையை பெற்றுள்ளது. தற்போது ரசிகர்கள பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் (100) (1975-2023)
தரவரிசை |
ஆட்டக்காரர் |
மொத்த ரன்கள் |
எதிர்ப்பு |
பந்துகள் (சதம் அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகள்) |
தேதி |
1 |
ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) |
106 |
இலங்கை |
49 |
7 அக்டோபர் 2023 |
2 |
கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) |
113 |
இங்கிலாந்து |
50 |
02 மார்ச் 2011 |
3 |
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) |
102 |
இலங்கை |
51 |
08 மார்ச் 2015 |
4 |
ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) |
162* |
மேற்கிந்திய தீவுகள் |
52 |
27 பிப்ரவரி 2015 |
5 |
இயோன் மோர்கன் (இங்கிலாந்து) |
101 |
ஆப்கானிஸ்தான் |
57 |
18 ஜூன் 2019 |
6 |
மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா) |
111 |
தென்னாப்பிரிக்கா |
66 |
24 மார்ச் 2007 |
7 |
ஜான் டேவிசன் (கனடா) |
117* |
மேற்கிந்திய தீவுகள் |
67 |
23 பிப்ரவரி 2003 |
8 |
குமார் சங்கக்கார (இலங்கை) |
117 |
இங்கிலாந்து |
70 |
01 மார்ச் 2015 |
9 |
பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) |
101 |
நெதர்லாந்து |
70 |
18 மார்ச் 2011 |
10 |
கபில் தேவ் (இந்தியா) |
175 |
ஜிம்பாப்வே |
72 |
18 ஜூன் 1983 |
11 |
ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) |
149 |
இலங்கை |
72 |
28 ஏப்ரல் 2007 |
12 |
குமார் சங்கக்கார (இலங்கை) |
105 |
பங்களாதேஷ் |
73 |
26 பிப்ரவரி 2015 |
13 |
ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) |
103 |
பாகிஸ்தான் |
75 |
03 ஜூன் 2019 |
14 |
பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே) |
121 |
அயர்லாந்து |
79 |
07 மார்ச் 2015 |
15 |
மஹேல ஜெயவர்தன (இலங்கை) |
100 |
கனடா |
80 |
20 பிப்ரவரி 2011 |
மேலும் படிக்க: ICC Cricket World Cup 2023: சாதனை மேல் சாதனை.. சிக்கிய இலங்கையை சிதைத்த தென் ஆப்ரிக்கா படைத்த வரலாற்று பட்டியல் இதோ..
மேலும் படிக்க: SL Vs SA WC 2023: டி காக், டு சென், மார்க்ரம் மிரட்டல் சதம்! பஞ்சரான இலங்கை பவுலிங்! 429 ரன்கள் டார்கெட்