SL Vs SA LIVE Score: இலங்கையை நையபுடைத்த தென் ஆப்ரிக்கா; 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ODI World Cup 2023 SL vs SA LIVE Score: உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இலங்கை தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
இரு அணிகளும் இணைந்து 31 சிக்ஸர்களும் 74 பவுண்டரிகளும் விளாசியுள்ளன. அதாவது இரு அணிகளும் பவுண்டரியில் மட்டும் 482 ரன்கள் குவித்துள்ளன.
இரு அணிகளும் இணைந்து இந்த போட்டியில் மொத்தம் 74 பவுண்டரிகள் விளாசியுள்ளன. இதில் தென் ஆப்ரிக்கா 45பவுண்டரிகளும் இலங்கை 29 பவுண்டரிகளும் விளாசியுள்ளது.
இரு அணிகளும் இணைந்து மொத்தம் 31 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. இதில் தென் ஆப்ரிக்கா அணி 14 சிக்ஸர்களும் இலங்கை அணி 17 சிக்ஸர்களும் விளாசியுள்ளது.
54 பந்துகளில் 106 ரன்கள் குவித்த மார்க்ரம்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 49 பந்துகளில் சதம் விளாசி புதிய உலகசாதனை படைத்தார்.
தென் ஆப்ரிக்கா அணி இந்த உலகக் கோப்பைத் தொடரினை 102 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடங்கியுள்ளது.
இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் தென் ஆப்ரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உள்ளது. ஆனால் கைவசம் ஒரு விக்கெட்டும் 6 ஓவர்களும் மட்டுமே உள்ளது.
இலங்கை அணியின் ரஜிதா தனது விக்கெட்டினை 31 பந்தில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இலங்கை அணி 40 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
429 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 41 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை 303 ரன்களை எட்டியுள்ளது.
40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
சிறப்பாக விளையாடி வந்த இலங்கை அணியின் கேப்டன் 62 பந்தில் 68 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
போட்டியின் 37வது ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்ஸரும், அதைத் தொடர்ந்து 4 பந்தில் பவுண்டரியும் விளாசிய அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவித்தார் ஷனாகா.
தோல்வியை தவிர்க்க போராடி வரும் இலங்கை அணி 36.3 ஓவரிகளில் 260 ரன்களை எட்டியுள்ளது.
இலங்கை அணி 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை அணி வெற்றி பெற 185 ரன்கள் தேவை.
இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் வெல்லலேகா தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
65 பந்தில் 79 ரன்கள் சேர்த்த இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அசலங்கா தனது விக்கெட்டினை நிகிடி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
இலங்கை அணியின் தற்போதைய ரன்ரேட் 7.24 ஆக உள்ளது. இலங்கை அணிக்கு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவைப்படுகிறது.
30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 215 ரன்கள் தேவை.
இலங்கை அணி 28.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்த 200 ரன்கள் சேர்த்துள்ளது.
47 பந்துகளில் தனது அரைசத்தினை பூர்த்தி செய்துள்ளார் இலங்கை அதிரடி ஆட்டக்காரர் அசலங்கா.
5 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வரும் இலங்கை அணி 24 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 14 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டினை ரபாடா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். இவர் 42 பந்தில் 4 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசினார்.
12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்தது.
10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் குஷால் மெண்டிஸ் மட்டும் 72 ரன்கள் சேர்த்துள்ளார்.
இலங்கை அணியின் குஷால் பெராரா தனது விக்கெட்டினை ஜான்சென் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
ஒரு விக்கெட்டினை இழந்தாலும் இலங்கை அணியின் குஷால் மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 7.4 ஓவர்கள் முடிவில் 67 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் குஷால் மெண்டிஸ் 25 பந்தில் அரைசதம் விளாசினார்.
இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் நிகிடி வீசிய 5வது ஓவரில் இரண்டாவது மற்றும் 5வது பந்து மற்றும் 6வது பந்தில் சிக்ஸர்கள் பறக்க விட்டு மிரட்டியுள்ளார்.
போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய ஜான்சனுக்கு உலகக் கோப்பை தொடரில் அதுதான் முதல் ஓவர், அதன் முதல் பந்தில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிஷ்கண்ணாவை போல்ட் ஆக்கினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷ்கண்ணா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
429 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
அதிரடியாக விளையாடிய தென் ஆப்ரிக்க அணி உலகக் கோப்பையில் 428 ரன்கள் குவித்து , உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்களை குவித்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம் தனது விக்கெட்டினை 54 பந்தில் 106 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடி வரும் மார்க்ரம் 49 பந்தில் 14 பவுண்டரி 3 சிக்ஸர் பறக்க விட்டு சதம் விளாசி விளையாடி வருகிறார்.
44 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் சேர்த்துள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் தென் ஆப்ரிக்க அணி 43.3 ஓவர்கள் முடிவில் 344 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக பவுண்டரிகள் விளாசி வந்த க்ளாசன் தனது விக்கெட்டினை 20 பந்தில் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்த மார்க்கரம் அதிரடியாக அரைசதம் விளாசி விளையாடி வருகிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி 300 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெறுமையைப் பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்கா அணி 41 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் சேர்த்துள்ளது.
40வது ஓவரின் 5வது பந்தில் க்ளாசன் அடித்த இமாலய சிக்ஸரால் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இதனால் பந்து தொலைந்து விட்டதால், வேறு பந்து கொண்டு போட்டி தொடரப்பட்டது.
போட்டியின் 40வது ஓவரின் 4வது மற்றும் 5வது பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்க விட்டார் க்ளாசன்.
39 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி சதம் விளாசிய டசன் 110 பந்துகளில் 108 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டினை 38வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார்.
தென் ஆப்ரிக்கா அணி 33 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாவது வீரராக களமிறாங்கிய டசன் சிறப்பாக பவுண்டரிகளை விரட்டி சதத்தினை நெருங்கி வருகிறார். அவர் தற்போது 96 ரன்கள் சேர்த்துள்ளார்.
83 பந்தில் அதிரடியாக சதம் விளாசியா டி காக் அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
83 பந்தில் அதிரடியான சதம் விளாசியுள்ளார் டி காக்
டி காக் மற்றும் டசன் கூட்டணி 178 பந்துகளில் 200 ரன்கள் விளாசியுள்ளனர்.
அதிரடியாக ரன்கள் குவித்து வரும் தென் ஆப்ரிக்கா அணி 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்துள்ளது.
5வது ஓவரை வீசி வரும் பத்திரானா இதுவரை 7 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணி 28 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 182 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 6.5ஆக உள்ளது.
டி காக் மற்றும் டசென் கூட்டணியில் இருவரும் 80 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
டி காக் மற்றும் டசென் கூட்டணி 150 பந்துகளில் 157 ரன்கள் குவித்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறது.
26வது ஓவரின் இறுதிப் பந்தில் டசென் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இலங்கை வீரர் வெல்லலகே தவறவிட்டார்.
25 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி ஒரு விக்கெடினை இழந்ஹு 158 ரன்கள் சேர்த்துள்ளது.
24 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 144 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தாலும் சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்ரிக்கா அணி 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 139 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பொறுப்புடன் விளையாடி வரும் டிகாக் 60 பந்துகளில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார்.
தென் ஆப்ரிக்க அணியின் வான் டர் டசன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அதிரடி காட்டி வருகிறார்.
சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்ரிக்க அணி 17.3 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறது.
சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்ரிக்க அணி 17.3 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறது.
தென் ஆப்ரிக்கா அணி 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 97 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது.
10.3 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கியுள்ள தென் ஆப்ரிக்க அணி தனது முதல் விக்கெட்டினை இழந்து விளையாடி வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் 29 ரன்கள் சேர்த்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது..
Background
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இரண்டாவது நடக்கும் ஆட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. பயிற்சி ஆட்டங்களுக்குப் பின் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி லீக் போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் நாளில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இன்று 2 ஆட்டங்கள்
3வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதலில் நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
அணிகளின் பலம்
இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் இறுதி ஆட்டத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. தொடர்ந்து பயிற்சி ஆட்டங்களிலும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில் மிக முக்கியமான போட்டித்தொடரில் களம் காண்கிறது. பேட்டிங்கில் ஓரளவு பலம் கொண்டுள்ள இலங்கை அணி பந்துவீச்சில் மிக முக்கியமானவர்கள் இல்லாததால் திணறி வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக உள்ளது. அந்த அணி கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் அந்த அணி களம் காண்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்கா அணி உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறையாவது வரலாற்றை மாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அந்த அணி களம் காண்கிறது. இதற்கு லீக் போட்டிகளில் இருந்தே வெற்றி பெற வேண்டும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
மைதான நிலவரம்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே டாஸ் வென்ற அணி ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து பெரும்பாலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பரிக்கா - இலங்கை அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதுவரை தென்னாப்பரிக்கா 4 முறையும், இலங்கை ஒரு முறையும், ஒருபோட்டி சமனில் போட்டி முடிவடைந்துள்ளது.
இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் (உத்தேச விபரம்)
இலங்கை அணி: குசல் பெரேரா, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன
தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி
மேலும் படிக்க: PAK vs NED World Cup 2023: உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் பலப்பரீட்சை: வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -