NZ vs PAK: பாகிஸ்தானுக்காக அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் விட்டுகொடுப்பு - மோசமான சாதனை படைத்த ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி!

முகேஷ் Updated at: 05 Nov 2023 01:11 PM (IST)

2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் மிகவும் மோசமான சாதனையை தங்களது பெயர்களில் பதிவு செய்துள்ளனர்.

ஷாஹீன் ஷா அஃப்ரிடி - ஹரிப் ரவுஃப்

NEXT PREV

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒரு பதிப்பில் அதிக சிக்ஸர்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை தனது பெயரில் படைத்துள்ளார். 


ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்:


நேற்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் வீச்சை தேர்வு செய்தது. அப்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது நடந்து வரும் உலகக் கோப்பையில் தனது 16வது சிக்ஸரை விட்டுக்கொடுத்தார் ஹரிஸ் ரவூப். இதன்மூலம், ஒருநாள் உலகக் கோப்பை ஒரு பதிப்பில் அதிக சிக்ஸர்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 


இதற்கு முன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் டினாஷே பன்யங்கரா 15 சிக்ஸர்களை விட்டுகொடுத்திருந்தார். தற்போது இவர் இந்த மோசமான பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றார். 2019 உலகக் கோப்பையின் போது தலா 14 சிக்ஸர்களை விட்டுகொடுத்து இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.


ஒருநாள் உலகக் கோப்பையின் ஒற்றை பதிப்பில் அதிக சிக்ஸர்கள் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள்:



  • ஹாரிஸ் ரவுஃப் (PAK) - 2023 இல் எட்டு போட்டிகளில் 16 சிக்ஸர்கள்

  • டினாஷே பன்யங்கரா (ZIM) - 2015 இல் எட்டு போட்டிகளில் 15 சிக்ஸர்கள்

  • யுஸ்வேந்திர சாஹல் (IND) - 2019 இல் எட்டு போட்டிகளில் 14 சிக்ஸர்கள்

  • ரஷித் கான் (AFG) - 2019 இல் எட்டு போட்டிகளில் 14 சிக்ஸர்கள்

  • ஜேசன் ஹோல்டர் (WI) - 2015 இல் ஏழு போட்டிகளில் 13 சிக்ஸர்கள்


ஹாரிஸ் ரவுஃப் - CWC 2023 இல் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் விட்டுகொடுத்த சிக்ஸர்கள்



  • நியூசிலாந்துக்கு எதிராக - 2 சிக்ஸர்கள்

  • பங்களாதேஷ் எதிராக - 0 சிக்ஸர்கள்

  •  தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக - 3 சிக்ஸர்கள்

  •  ஆப்கானிஸ்தானிற்கு எதிராக - 0 சிக்ஸர்கள்

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 5 சிக்ஸர்கள்

  • இந்தியாவிற்கு எதிராக - 3 சிக்சர்கள்

  • இலங்கைக்கு எதிராக - 2 சிக்ஸர்கள்

  • நெதர்லாந்துக்கு எதிராக - 1 சிக்சர்


2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் மிகவும் மோசமான சாதனையை தங்களது பெயர்களில் பதிவு செய்துள்ளனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்களாக ஆனார்கள். 10 ஓவர்களில் ஹாரிஸ் ரவுப் 85 ரன்களும், ஷாஹீன் அப்ரிடி 90 ரன்களும் எடுத்தனர். நேற்றைய போட்டியில், ​​ஷாஹீன் எந்த விக்கெட்டையும் பெறவில்லை, ஹரிஸ் ஒரு விக்கெட்டை மட்டும் எடுத்திருந்தார்/ 


2019 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலியின் சாதனையை ஹரிஸ் மற்றும் ஷாஹீன் முறியடித்தனர். ஆனால் ஹசன் அலியின் இந்த வெட்கக்கேடான சாதனையை தற்போது ஹாரிஸ் ரவுஃப் மற்றும் பின்னர் ஷாஹீன் ஷா அப்ரிடி முறியடித்தனர். 


இதே உலகக் கோப்பையில், பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரிஸ் ரவுஃப் 10 ஓவர்களில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதியது. அப்போது இந்த சாதனை படைக்கப்பட்டது/ 


பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள் (ஒரு இன்னிங்ஸில்)



  • 0/90 - ஷாஹீன் அப்ரிடி vs நியூசிலாந்து, பெங்களூரு, நேற்று*

  • 1/85 - ஹாரிஸ் ரவுஃப் vs நியூசிலாந்து, பெங்களூரு, நேற்று*

  • 1/84 - ஹசன் அலி vs இந்தியா, மான்செஸ்டர், 2019

  • 3/83 - ஹாரிஸ் ரவுஃப் vs ஆஸ்திரேலியா, பெங்களூரு, 2023


இந்தப் போட்டியில் ஷாஹீன் அப்ரிடியின் மற்றொரு சாதனையும் முறியடிக்கப்பட்டது. கடந்த 24 ஒருநாள் இன்னிங்ஸ்களுக்கு பிறகு ஷாஹீன் அப்ரிடி எந்த விக்கெட்டையும் எடுக்காமல் இருப்பது இதுவே முதல் முறை. கடந்த 24 இன்னிங்ஸ்களில் குறைந்தது 1 விக்கெட்டையாவது எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published at: 05 Nov 2023 01:11 PM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.