Fakhar Zaman: பாகிஸ்தானுக்காக அதிவேக சதம்.. ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் - சாதனைகளை குவித்த ஃபகார் ஜமான்!

முகேஷ் Updated at: 05 Nov 2023 10:51 AM (IST)

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஃபகார் ஜமான் படைத்துள்ளார்.

ஃபகார் ஜமான் (image source: twitter)

NEXT PREV

உலகக் கோப்பை 2023ல் நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் வெறும் 63 பந்துகளில் சதத்தை கடந்தார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஃபகார் ஜமான் படைத்துள்ளார். முன்னதாக இந்த சாதனை இம்ரான் நசீர் பெயரில் இருந்தது. 2007 உலகக் கோப்பையில், இம்ரான் நசீர் 95 பந்துகள் சதம் அடித்திருந்த நிலையில், தற்போது இம்ரான் நசீரின் சாதனையை ஃபகார் ஜமான் முறியடித்துள்ளார்.


ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம்



  • கிளென் மேக்ஸ்வெல் 40 பந்துகள் - ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து - டெல்லி, 2023

  • ஐடன் மார்க்ரம் 49 பந்துகள் - தென்னாப்பிரிக்கா vs இலங்கை - டெல்லி, 2023

  • கெவின் ஓ பிரையன் 50 பந்துகள் - அயர்லாந்து vs இங்கிலாந்து - பெங்களூர், 2011

  • கிளென் மேக்ஸ்வெல் 51 பந்துகள் - ஆஸ்திரேலியா vs இலங்கை - சிட்னி, 2015

  • ஏபி டி வில்லியர்ஸ் 52 பந்துகள் - தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - சிட்னி, 2015

  • இயான் மோர்கன் 57 பந்துகள் - இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் - மான்செஸ்டர், 2019

  • ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகள் - தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து - மும்பை, 2023

  • ரோஹித் சர்மா 63 பந்துகள் - இந்தியா vs ஆப்கானிஸ்தான் - டெல்லி, 2023

  • ஃபகார் ஜமான் 63 பந்துகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து - பெங்களூரு, 2023

  • குசல் மெண்டிஸ் 65 பந்துகள் - இலங்கை vs பாகிஸ்தான் - ஹைதராபாத், 2023

  • மேத்யூ ஹெய்டன் 66 பந்துகள் - ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா - பாசெட்டரே, 2007

  • ஜான் டேவிசன் 67 பந்துகள் - கனடா vs வெஸ்ட் இண்டீஸ் - செஞ்சுரியன், 2003

  • பால் ஸ்டிர்லிங் 70 பந்துகள் - அயர்லாந்து vs நெதர்லாந்து - கொல்கத்தா, 2011

  • குமார் சங்கக்கார 70 பந்துகள் - இலங்கை vs இங்கிலாந்து - வெலிங்டன், 2015

  • ஆடம் கில்கிறிஸ்ட் 72 பந்துகள் - ஆஸ்திரேலியா vs இலங்கை - பிரிட்ஜ்டவுன், 2007

  • குமார் சங்கக்கார 73 பந்துகள் - இலங்கை vs பங்களாதேஷ் - மெல்போர்ன், 2015

  • ஷைமான் அன்வர் 79 பந்துகள் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs அயர்லாந்து - பிரிஸ்பேன், 2015

  • பிரெண்டன் டெய்லர் 79 பந்துகள் - ஜிம்பாப்வே vs அயர்லாந்து - ஹோபர்ட், 2015


2023 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்: 


இதுவரை, இந்த உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இந்த தனித்துவமான பட்டியலில் தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானும் இணைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கோப்பை 2023ல் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஃபகார் ஜமான் 18 சிக்ஸர்களை அடித்துள்ளார். முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மா 7 போட்டிகளில் 20 சிக்சர்கள் அடித்துள்ளார்.


இந்த பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 2வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 7 இன்னிங்ஸ்களில் 20 சிக்ஸர்களையும் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 


ஒருநாள் உலகக் கோப்பை இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்



  • இயான் மோர்கன் - 2019 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 17 சிக்ஸர்கள்

  • கிறிஸ் கெய்ல் - 2015 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 16 சிக்ஸர்கள்

  • மார்ட்டின் கப்டில் - 2015 இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 சிக்ஸர்கள்

  • ஃபகார் ஜமான் - 2023 இல் நியூசிலாந்துக்கு எதிராக 11 சிக்ஸர்கள்


ஒரு நாள் இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்காக அதிக சிக்ஸர்கள்



  • ஷாஹித் அப்ரிடி - 1996 இல் இலங்கைக்கு எதிராக 11 சிக்ஸர்கள்

  • ஃபகார் ஜமான் - 2023 இல் நியூசிலாந்துக்கு எதிராக 11 சிக்ஸர்கள்

  • அப்துல் ரசாக் - 2010 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 10 சிக்ஸர்கள்

  • ஃபகார் ஜமான் - 2021 இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 10 சிக்ஸர்கள்

Published at: 05 Nov 2023 10:51 AM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.