Pak vs Ned LIVE Score: 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தான்
ODI World Cup 2023 PAK vs NED LIVE Score: உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
நெதர்லாந்தின் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் +1.620 என்ற ரன்ரேட்டைப் பெற்றுள்ளது.
இரு அணிகளும் இணைந்து மொத்தம் 53 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் விளாசியுள்ளன. இதில் பாகிஸ்தான் 33 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களும் நெதர்லாந்து 20 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களும் விளாசியுள்ளன.
உலகக் கோப்பை 2023 தொடங்கி இரண்டு போட்டிகள் தான் முடிந்திருந்தாலும், இதில் பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில்தான் இரண்டு அணிகளும் ஆல்-அவுட் ஆகியுள்ளன.
இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இக்கட்டான சூழலில் பாகிஸ்தானை வலுவான நிலைக்கு கொண்டு சென்ற சவ்த் ஷக்கீல்க்கு ப்ளேயர் ஆஃப்த மேட்ச் விருது கொடுக்கப்பட்டது. இவர் 52 பந்தில் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட் 68 ரன்கள் குவித்திருந்தார்.
நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை 2023 தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இறுதியில் நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீசிய 6 பந்து வீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றினர்.
நெதர்லாந்து அணி 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது.
39 ஓவர்களில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணி 11 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். ஆனால் கைவசம் ஒரு விக்கெட் மட்டும் உள்ளது.
நெதர்லாந்து அணி தனது 9வது விக்கெட்டினை இழந்து தோல்வியின் பிடியில் உள்ளது.
நெதர்லாந்து அணி வெற்றி பெற இன்னும் 103 ரன்கள் தேவை. கைவசம் 2 விக்கெட்டுகளும் 13 ஓவர்களும் உள்ளது.
36வது ஓவர் முடிவில் நெதர்லாந்து அணியின் மெர்வீ ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறியுள்ளார்.
நெதர்லாந்து அணி 36வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணி வெற்றி பெற 112 ரன்கள் தேவை.
நெதர்லாந்து அணி வெற்றி பெற இன்னும் 90 ரன்கள் தேவை. 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணியின் லீதி சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த நிலையில் முகமது நவாஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 68 பந்தில் 67 ரன்கள் சேர்த்திருந்தார்.
போட்டியின் 33வது ஓவரை வீசிய அஃப்ரிடியின் ஓவரின் முதல் பந்தில் ஷாகிப் விக்கெட்டை கைப்பற்றினார்.
நெதர்லாந்து அணி வெற்றி பெற இன்னும் 18 ஓவர்களில் 129 ரன்கள் தேவை. அந்த அணி தற்போது 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது.
30 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. நெதர்லாந்து வெற்றி பெற 20 ஓவர்களில் 137 ரன்கள் தேவை.
5 விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பாக ரன்கள் சேர்க்கும் நெதர்லாந்து அணி 29.1 ஓவர்களில் 150 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணியின் லீதி 50 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.
நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
நெதர்லாந்து அணியின் பேட்டிங் வரிசையில் 6வது வீரராக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் களமிறங்கியுள்ளார்.
நெதர்லாந்து அணியின் தேஜா சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
25 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரமஜித் சிங் 52 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டை பாகிஸ்தான் அணியின் ஃபஹர் ஜமான் கைப்பற்றினார்.
நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் 65 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் இதுவரை 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.
விக்ரமஜித் சிங் மற்றும் லீதி கூட்டணி இதுவரை 65 பந்தில் 58 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
20.1 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகள் இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
நடந்து வரும் போட்டியில் பாகிஸ்தானா நெதர்லாந்தா என்ற கேள்விக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் பாகிஸ்தான் 64 சதவீதமும் நெதர்லாந்து 36 சதவீதமும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணி தனது ரிவ்யூக்களில் ஒன்றை இழந்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் விக்ரமஜித் சிங் விக்கெட்டை கைப்பற்ற பாகிஸ்தான் அணி மூன்றாவது நடுவரை நாடியுள்ளது.
18 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 4.71ஆக உள்ளது.
நெதர்லாந்து அணியின் முதல் சிக்ஸரை விளாசினார் லீதி. இவர் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது.
2 விக்கெட்டுகளை இழந்ததும் நெதர்லாந்து அணி மந்தமாக விளையாடி வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் அந்த அணி 58 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
பொறுமையாக விளையாடி வந்த அக்கெர்மான் தனது விக்கெட்டை இஃப்தாகிர் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 21 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். அதில் 3 பவுண்டரிகளும் அடங்கும்.
10.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 47 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்களில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 40 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி தொடர்ந்து 10 பந்துகள் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார்.
போட்டியின் 6வது ஓவரை வீசிய ஹசன் அலி அந்த ஓவரை மெய்டனாக வீசியது மட்டும் இல்லாமல் அந்த ஓவரில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.
நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓடோவ் தனது விக்கெட்டினை ஹசன் அலி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
5 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்துள்ளது.
287 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள நெதர்லாந்து அணி நிதானமாகவே ரன்கள் குவித்து வருகிறது.
4 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணி தனது முதல் பவுண்டரியை போட்டியின் 2வது ஓவரிலேயே அடித்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 4 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அஃப்ரிடி பாகிஸ்தான் அணியின் முதல் ஓவரை வீசுகிறார்.
பாகிஸ்தான் அணி சார்பில் 29 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.
287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களமிறங்கியுள்ளது.
பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது.
49வது ஓவரின் 4வது பந்தில் பாகிஸ்தான் அணி 280 ரன்களை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 48 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முகமது நவாஸ் தனது விக்கெட்டினை ரன் அவுட் முறையில் இழந்து வெளியேறினார்.
46 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டினை இழந்து 266 ரன்கள் சேர்த்துள்ளது.
நெதர்லாந்து அணியின் லீதி வீசிய 44வது ஓவரின் 4வது மற்றும் 5வது பந்தில் விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசி பந்தில் விக்கெட் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த பந்தை எதிர்கொண்ட அஃப்ரிடி சிறப்பாக தடுத்துவிட்டார்.
பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி தான் களமிறங்கி எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
வேகப்பந்து வீச்சாளர் லீதி வீசிய 44வது ஓவரின் 4வது பந்தில் ஷதப் கான் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். ஷதப் கான் 34 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 250 ரன்களை எட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்து 250 ரன்களை நெருங்கி வருகிறது. தற்போது பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.81ஆக உள்ளது.
41வது ஓவர் வரை பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் சேர்த்துள்ளது.
39வது ஓவரின் 5வது பந்தில் ஷதாப் கான் இரண்டாவது சிக்ஸரை விளாசினார்.
பாகிஸ்தான் அணி 38 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் சேர்த்துள்ளது.
36.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியுள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.51ஆக உள்ளது.
பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி 34 ஓவர்கள் முடிவில் 6 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் சேர்த்துள்ளது.
32வது ஓவரை வீசிய லீதி அந்த ஓவரின் மூன்றாவது மற்றும் கடைசி பந்தில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானை மீண்டும் சரிவில் தள்ளியுள்ளார்.
இஃப்தகிர் தனது விக்கெட்டினை லீதி வீசிய 32வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார்.
7வது பேட்ஸ்மேனாக முகமது நவாஸ் பாகிஸ்தான் தரப்பில் களமிறங்கியுள்ளார். இவர் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டியுள்ளார்.
31.3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 182 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி வந்த ரிஸ்வான் லீதி பந்து வீச்சில் தனது விக்கெட்டை க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார்.
நெதர்லாந்து அணி தரப்பில் இதுவரை 8 பேர் பந்து வீசியுள்ளனர். இதில் 4 பேர் தல ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
30 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் சேர்த்துள்ள பாகிஸ்தான் அணியின் தற்போதைய ரன்ரேட் 5.67ஆக உள்ளது.
30 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் 6வது பேட்ஸ்மேனாக இஃப்திகார் அகமது களமிறங்கியுள்ளார்.
115 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தது மட்டும் இல்லாமல் 3 விக்கெட்டுகளை பவர்ப்ளேவிற்குள் இழந்து தத்தளித்து வந்த பாகிஸ்தானை ரிஸ்வான் ஷவ்த் கூட்டணி மீட்டது குறிப்பிடத்தக்கது.
115 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்த ரிஸ்வான் ஷவ்த் கூட்டணியை நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டட் பிரித்துள்ளார். இவர் வீசிய 29வது ஓவரின் முதல் பந்தில் அதிரடியாக ஆடி வந்த ஷவ்த் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின்னர் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 28 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் 20 பவுண்டரி ஒரு சிக்ஸர் பாகிஸ்தான் தரப்பில் விளாசப்பட்டுள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் ஷவ்த் மற்றும் ரிஸ்வான் கூட்டணியில் ரிஸ்வான் 64 பந்துகளில் 52 ரன்களும், ஷவ்த் 48 பந்தில் 67 ரன்கள் சேர்த்துள்ளார்.
26.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் ரிஸ்வான் 59 பந்தில் 6 பவுண்டரி விளாசி தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
25 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்துள்ளது.
3 ஓவர்களை இழந்து தத்தளித்து வந்த பாகிஸ்தான் அணியை ரிஸ்வான் மற்றும் சவ்த் கூட்டணி சிறப்பாக முன்னேற்றி வருகிறது. இவர்கள் இருவரும் இதுவரை 95 பந்தில் 104 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறி வந்த போது சிறப்பாக விளையாடி அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டது மட்டும் இல்லாமல் 32 பந்தில் தனது அரைசதத்தையும் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணி 22 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது.
21.2வது ஓவரில் கிடைத்த ஃப்ரீ கிட் பந்தை ஷவ்த் ஷகில் போட்டியின் முதல் சிக்ஸரை விளாசினார்.
21.2 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் சேர்த்திருந்தாலும், இதுவரை ஒரு சிக்ஸர் கூட விளாச வில்லை.
இதுவரை 21 ஓவர்கள் வீசியுள்ள நெதர்லாந்து அணி தன்னிடம் உள்ள முழுநேர பந்து வீச்சாளர்கள் பகுதி நேர பந்து வீச்சாளர்கள் என மொத்தம் 7 பேர் பந்து வீசியுள்ளனர்.
21 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
3 விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த்ய் 91 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது.
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நெதர்லாந்து அணி 16 ஓவர்கள் வீசியுள்ளது. இதற்காக நெதர்லாந்து அணி 6 பந்து வீச்சாளார்களை பயன்படுத்தி உள்ளது.
16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த பாகிஸ்தான் அணி 11வது ஓவரில் இருந்து அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வருகிறது.
38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த பாகிஸ்தான் அணி மெல்ல மெல்ல வேகமாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
12 ஓவர்கள் வீசியுள்ள நெதர்லாந்து அணி பந்து வீச்சில் மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்து, நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறது.
நெதர்லாந்து அணி இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஆரியன் டட்டுடன் தொடங்கியது.
முதல் 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஃபக்கர் ஜமான்,பாபர் மற்றும் இமாம் உல்-ஹாக் ஆகியோர் தனது விக்கெட்டுகளை இழந்ததால் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டை 19 பந்தில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபரின் விக்கெட்டை அக்ரீமான் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியும் ரசிகர்கள் இல்லாததால் மைதானம் வெறிச்சோடி உள்ளது.
6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 24 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் சார்பில் ஃபகர் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், கொலின் அக்கரமேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐதராபாத் வெப்பநிலை பகலில் 32 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். பகல் மற்றும் இரவு நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த இடையூறுமின்றி போட்டி முழுவதும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. இன்றைய போட்டியிலும் அதே நிலைமை நிலவக் கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது சாதகமாக கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது.
போட்டிக்கான டாஸ் 01.30 மணிக்கு போடப்படும் தொடர்ந்து 2 மணியளவில் போட்டி தொடங்கும். இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்
பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் 6 முறை ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. ஐதராபாத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
Background
ODI World Cup 2023 PAK vs NED LIVE Score: உலகக் கோப்பையில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
பாகிஸ்தான் - நெதர்லாந்து மோதல்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை நேற்று உற்சாகமாக தொடங்கியது. நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி, கடந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு நியூசிலாந்து பழிதீர்த்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வலுவான பாகிஸ்தானை, வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்து எதிர்கொள்ள உள்ளது. தொடரை வெற்றிகரமாக தொடங்க பாகிஸ்தான் முனைகிறது. அதேநேரம், அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முழு திறமையயும் வெளிப்படுத்த நெதர்லாந்து தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பலம் & பலவீனங்கள்:
ஆசியக் கோப்பையில் லீக் சுற்றில் வெளியேறியதோடு, உலகக் கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. பேட்டிங்கில் பாபர் அசாம், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ர்ஸ்வான் ஆகிய நட்சத்திர வீரர்கள் நம்பிக்கையளிக்க, பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடி தலைமையிலான வேகப்பந்து விச்சு யூனிட் நெதர்லாந்தை மிரட்ட காத்திருக்கிறது. இதனால், இந்த போட்டி அவர்களுக்கு கடுமையானதாகவே இருக்கக் கூடும். சர்வதேச அணியில் போதிய அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணி, இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மைதான விவரம்:
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. இன்றைய போட்டியிலும் அதே நிலைமை நிலவக் கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது சாதகமாக கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது.
உத்தேச அணி:
பாகிஸ்தான்:
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
நெதர்லாந்து:
மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், ஷாரிஸ் அஹ்மத், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
வெற்றி வாய்ப்பு: போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லவே அதிக வாய்ப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -