உலகக் கோப்பை 2023ல் இன்று இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முந்தைய போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கும்.
கொல்கத்தா ஆடுகளம் எப்படி..?
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனின் ஆடுகளம் மிக அதிக ஸ்கோரை அடிக்க உதவும் பிட்சாகும். இந்த மைதானத்தில், ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது போல் தெரியும். ஆனால் பந்து பழையதாகிவிட்ட பிறகு, பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை விரட்டுவார்கள். இந்த மைதானத்தின் அவுட்பீல்ட் மிக வேகமாக உள்ளது, இதன் காரணமாக பல முறை பெரிய ஸ்கோர்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சராசரி ஸ்கோர் 404 ரன்கள். அதேசமயம் இந்த ஆடுகளத்தில் 63 ரன்களே மிகச்சிறிய ஸ்கோராகவும் பதிவாகியுள்ளது. எனவே, இங்கு டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்து வீச விரும்பும்.
கொல்கத்தாவில் வானிலை எப்படி இருக்கும்?
நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இந்தப் போட்டியில் மழையால் எந்த இடையூறும் ஏற்படாது. வானம் தெளிவாக இருக்கும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், இரு அணிகளும் உலகக் கோப்பை 2023ல் தங்களது இரண்டாவது வெற்றிக்காக போராடும்.
கணிக்கப்பட்ட வங்கதேச அணி:
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது
கணிக்கப்பட்ட நெதர்லாந்து அணி:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்