AUS vs NZ Score LIVE: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து; பயம் காட்டிய நியூசிலாந்து; போராடி வென்ற ஆஸ்திரேலியா
AUS vs NZ Score LIVE: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டிகளின் லைவ் அப்டெட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
48 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 357 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 12 பந்தில் 32 ரன்கள் தேவை.
அதிரடியாக விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை 89 பந்தில் 116 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 292 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிலிப்ஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 12 ரன்களில் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 37 ஓவர்கள் முடிவில் 265ஆக உள்ளது. வெற்றிக்கு இன்னும் 124 ரன்கள் தேவை.
36.1 ஓவர்களில் சிக்ஸர் விளாசி சதம் விளாசியுள்ளார் ரச்சின் ரவிந்திரா.
களமிறங்கி அரைசதம் விளாசும் வரை நிதானமாக ஆடி வந்த ரச்சின், அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தினால் சதத்தினை நெருங்கியுள்ளார். 76 பந்தில் 94 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 244 ரன்கள் குவித்துள்ளது.
32 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 224 ரன்கள் சேர்த்துள்ளது.
ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லாதம் கூட்டணி 44 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்துள்ளது.
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தனது விக்கெட்டினை ஆடம் ஜாம்பா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 22 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார்.
29.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 203 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
29 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 191 ரன்கள் தேவை.
28 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வரும் ரச்சின் 50 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
ஆஸ்திரேலியா அணி தன்னிடம் இருந்த இரண்டு ரிவ்யூக்களையும் இழந்துள்ளது.
26 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 175 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் பொறுப்பாக விளையாடும் ரச்சின் ரவீந்திரா இதுவரை 44 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நெருங்கி வருகின்றார்.
25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 131 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வந்த மிட்ஷெல் தனது விக்கெட்டினை ஆடம் ஜம்பா ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 51 பந்தில் 54 ரன்கள் சேர்த்திருந்தார்.
போட்டியின் 24வது ஓவரை வீசிய ஆடம் ஜாம்பா ஓவரில் ரச்சின் ரவீந்திரா அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி மிரட்டியுள்ளார்.
23 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற 230 ரன்கள் தேவை.
நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 22 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியது முதல் சிறப்பாக ஆடி வரும் மிட்ஷெல் 42 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கின்றார்.
நியூசிலாந்து அணியின் மிட்ஷெல் தனது அரைசதத்தினை நெருங்கி வருகின்றார். இவர் தற்போது 40 பந்துகளில் 47 ரன்கள் குவித்துள்ளார்.
21 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 149 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 142 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் சேர்த்து வெற்றியை துரத்தி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை 101 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. மேலும் ரன்ரேட்டினை சீராக வைத்துள்ளது.
நியூசிலாந்து அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 87 ரன்கள் சேர்த்து நிதான ஆட்டத்தினை கடைபிடித்து வருகின்றது.
நியூசிலாந்து அணியின் தற்போதைய ரன்ரேட் 10.3ஆக உள்ளது.
முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 73 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் தனது விக்கெட்டினை 9.4 ஓவரில் ஹசல்வுட் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 37 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
9 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 8வது ஓவரினை வீசிய ஹசல்வுட் பந்தில் டெவின் கான்வே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 17 பந்தி 28 ரன்கள் சேர்த்திருந்தார்.
7 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்து அதிரடியாக பவுண்டரிகள் விளாசி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
389 ரன்கள் இலக்கை துரத்தும் முனைப்பில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணியின் முதல் சிக்ஸரை வில் யாங் போட்டியின் 4வது ஓவரில் விளாசியுள்ளார்.
3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணியின் முதல் பவுண்டரியை கான்வே முதல் ஓவரில் விரட்டியுள்ளார். முதல் ஓவரை மிட்ஷெல் ஸ்ட்ராக் வீசி வருகின்றார்.
389 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயம் செய்துள்ளது.
18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மார்னஸ் லாபுசாக்னே, சாண்ட்னர் வீசிய 39 ஓவரில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்சு கொடுத்து அவுட்டானார்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், 18 ரன்களில் பிலிப்ஸ் பந்தில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
சதம் அடித்த வேகத்தில் டிராவிஸ் ஹெட் அவுட்டானார். தற்போது மார்ஷ் - ஸ்மித் ஜோடி ஆடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாக ஆடி வரும் ட்ராவிஸ் ஹெட் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இதனுடன் ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் அரை சதம் கடந்தார் டேவிட் வார்னர்.
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் மற்றும் டிரெண்ட் போல்ட்.
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.
நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ரன்களை எடுத்துள்ளது.
Background
2023 உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தர்மசாலாவிலும், 2வது போட்டி வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்குகியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கிறது. இங்குள்ள ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் நல்ல உதவி கிடைத்து வருகிறது.
இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிவி அணி இதுவரை ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. எட்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியா ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
நியூசிலாந்து அணி:
டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -