ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிகள் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றன. உலகக் கோப்பையின் ஏழாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளையும் இந்திய அணி தோற்கடித்தது.


போட்டியின் லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) நெதர்லாந்தை எதிர்த்து இந்திய அணி கடைசி மற்றும் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து ஒரு மோசமான செய்தி கிடைத்துள்ளது. இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக புதன்கிழமையான நேற்று (நவம்பர் 8) பயிற்சி அமர்வில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி அமர்வில் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுக்கு விரட்டினார். ஆனால் பும்ராவை எதிர்கொண்டபோது மட்டும் சுப்மல் கில் பொறுமையாக விளையாடினார். ஒரு விருப்பமான பயிற்சி அமர்வு என்றாலும், பும்ரா அதை ஒரு நொடி கூட எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் முழு 20 நிமிடங்களுக்கும் தனது முழு திறனையும் வெளிப்படுத்தினார்.


விருப்பமான பயிற்சி அமர்வாக இருந்ததால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. ரோஹித் சர்மா உட்பட மற்ற வீரர்கள் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் வலைகளில் நேரத்தை செலவிட்டனர்.


இந்த பயிற்சியில் பும்ராவின் பந்துவீச்சில் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்த இளம் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான இஷான் கிஷானுக்கு காயம் ஏற்பட்டது. பந்து இஷானின் வயிற்றில் பலமாக தாக்கியது. இதனால் இஷான் வலி தாங்க முடியாமல் தரையில் விழுந்தார். அதனை தொடர்ந்து இஷானை சோதனை செய்தபோது காயம் பெரிதாக இல்லை என்று தெரிந்தது. நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக முழு போட்டியிலிருந்தும் விலகி இருப்பது தெரிந்ததே.




வருகின்ற நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நெதர் லாந்தை எதிர்த்து இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றியுடன் முடிக்க இந்திய அணி முயற்சிக்கும். இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்கள், திங்கள்கிழமை மாலை கொல்கத்தாவில் இருந்து நேரடியாக பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.






உலகக் கோப்பைக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பிரசாத் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.