உலகக் கோப்பை 2023ல் அதிக ரன்கள் அடித்த மற்றும் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை முகமது ஷமி படைத்தார்.  

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், உலகக் கோப்பை 2023ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா 9 போட்டிகளில் 22 விக்கெட்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், தில்சன் மதுஷங்க 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்: 

பந்து வீச்சாளர்கள் போட்டிகள் விக்கெட்டுகள் எகானமி சராசரி சிறந்த பந்துவீச்சு
முகமது ஷமி (IND) 6 23 5.01 9.13 7/57
ஆடம் ஜம்பா (AUS) 9 22 5.26 18.90 4/8
தில்ஷான் மதுஷங்க (SL) 9 21 6.70 25.00 5/80
ஜஸ்பிரித் பும்ரா (IND) 10 18 3.98 18.33 4/39
ஜெரால்ட் கோட்ஸி (SA) 7 18 6.40 19.38 4/44
ஷஹீன் அப்ரிடி (PAK) 9 18 5.93 26.72 5/54
மார்கோ ஜான்சன் (SA) 8 17 6.41 24.41 3/31
ரவீந்திர ஜடேஜா (IND) 10 16 4.25 22.18 5/33
மிட்செல் சான்ட்னர் (NZ) 10 16 4.84 28.06 5/59
பாஸ் டி லீடே (NED) 9 16 7.26 30.43 4/62

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 50வது ஒருநாள் சதத்தை விளாசிய இந்திய வீரர் விராட் கோலி, உலகக்கோப்பை 2023ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் இரண்டாவது இடத்திலும், ரச்சின் ரவீந்திரா மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்: 

பேட்ஸ்மேன்கள் போட்டிகள் ரன்கள் சராசரி ஸ்ட்ரைக் ரேட் அதிகபட்ச ஸ்கோர்
விராட் கோலி (IND) 10 711 101.57 90.68 117
குயின்டன் டி காக் (SA) 9 591 65.66 109.24 174
ரச்சின் ரவீந்திரா (NZ) 10 578 64.22 106.44 123*
டேரில் மிட்செல் (NZ) 10 552 69.00 111.06 134
ரோஹித் சர்மா (இந்தியா) 10 550 55.00 124.15 131
ஷ்ரேயாஸ் ஐயர் (IND) 10 526 75.14 113.11 128*
டேவிட் வார்னர் (AUS) 9 499 55.44 105.49 163
ரஸ்ஸி வான் டெர் டுசென் (SA) 9 442 55.25 88.57 133
மிட்செல் மார்ஷ் (AUS) 8 426 60.85 109.51 177*
டேவிட் மாலன் (ENG) 9 404 44.88 101.00 140

ஒரு உலகக் கோப்பை பதிவில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்: விராட் கோலி முதலிடம்

கடந்த ஒருநாள் உலகக் கோப்பைகளில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறினார்.

வீரர்கள்

ரன்கள்

ஆண்டு

இன்னிங்ஸ்

அதிகபட்ச ஸ்கோர்

விராட் கோலி (IND)

711

2023

10

117

சச்சின் டெண்டுல்கர் (IND)

673

2003

11

152

மேத்யூ ஹைடன் (AUS)

659

2007

10

158

ரோஹித் ஷர்மா (இந்தியா)

648

2019

9

140

டேவிட் வார்னர் (AUS)

647

2019

10

166

ஷாகிப் அல் ஹசன் (BAN)

606

2019

8

124*

குயின்டன் டி காக் (SA)

591

2023

9

174

கேன் வில்லியம்சன் (NZ)

578

2019

9

148

ரச்சின் ரவீந்திரா (NZ)

565

2023

9

123*

ஜோ ரூட் (ENG)

556

2019

11

107

டேரில் மிட்செல் (NZ)

552

2023

9

134

ரோஹித் ஷர்மா (IND)

550

2023

10

131

மஹேல ஜெயவர்தன (SL)

548

2007

11

115*

மார்ட்டின் குப்டில் (NZ)

547

2015

9

237*

குமார் சங்கக்கார (SL)

541

2015

7

124

ரிக்கி பாண்டிங் (AUS)

539

2007

9

113

ஜானி பேர்ஸ்டோ (ENG)

532

2019

11

111

ஷ்ரேயாஸ் ஐயர் (IND)

526

2023

10

128*

சச்சின் டெண்டுல்கர் (IND)

523

1996

7

137

ஆரோன் பின்ச் (AUS)

507

2019

10

153

திலகரத்ன தில்ஷன் (SL)

500

2011

9

144