ENG vs NZ LIVE Score: நடப்புச் சாம்பியனை ஊதித்தள்ளிய நியூசிலாந்து; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
த. மோகன்ராஜ் மணிவேலன்Last Updated: 05 Oct 2023 09:18 PM
Background
ODI WC Eng Vs NZ: ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.இங்கிலாந்து - நியூசிலாந்து மோதல்:சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இன்று...More
ODI WC Eng Vs NZ: ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.இங்கிலாந்து - நியூசிலாந்து மோதல்:சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இன்று தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன், கடந்த தொடரில் இரண்டாவது இடம்பிடித்த நியூசிலாந்து மோதுகிறது. தொடரை வெற்றிகரமாக தொடங்க இங்கிலாந்து அணியும், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிவாங்க நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டும் என்பதால், போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.பலம் & பலவீனங்கள்:இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடரை, இங்கிலாந்து 3-1 என கைப்பற்றியது. ஆனால், உலகக் கோப்பை சூழல் வேறுமாதிரியாக இருக்கும் என கருதப்படுகிறது. இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அதேநேரம், இங்கிலாந்து அணியில் உள்ள ஆல்-ரவுண்டர்கள் அந்த அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.இன்றைய போட்டியில் பேட்டிங்கில் நியூசிலாந்தின் கான்வேயும், பந்துவீச்சில் இங்கிலாந்தின் மார்க் உட்டும் அசத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் வ்ல்லியம்சன் விளையாடாதது நியூசிலாந்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.நேருக்கு நேர் & சாதனைகள்:ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 95 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 44 முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் ட்ராவில் முடிய, 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் - 408/9இங்கிலாந்திற்கு எதிராக நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் - 398/5நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர் - 89இங்கிலாந்திற்கு எதிராக நியூசிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர் - 134நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்து வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் - பென் ஸ்டோக்ஸ் (182)இங்கிலாந்திற்கு எதிராக நியூசிலாந்து வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் - கப்தில் (189)அகமதாபாத் மைதானம் எப்படி?அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆறு கருப்பு மண் ஆடுகளங்களும், ஐந்து சிவப்பு மண் ஆடுகளங்களும் உள்ளன. சிவப்பு மண் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கின்றன. அதே சமயம் கருப்பு மண் ஆடுகளங்கள் ஸ்லோவர்களுக்கு சாதகமாக உள்ளன. பேட்ஸ்மேன்கள் நேரம் எடுத்து செட்டில் ஆகிவ்ட்டால் ரன்கள் குவிக்க அதிக வாய்ப்புள்ளது. கிடைக்கும் ஆடுகளத்தை பொறுத்து போட்டியின் போக்கு மாறலாம். இன்றைய போட்டியின் போது மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், போட்டியின் முடிவில் பனி ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன்கள் செயல்பட வேண்டியது அவசியம்.உத்தேச வீரர் விவரங்கள்:இங்கிலாந்து:ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், மார்க் வூட், அடில் ரஷித், ரீஸ் டாப்லிநியூசிலாந்து:டெவோன் கான்வே, வில் யங், மார்க் சாப்மேன்/மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி, டிம் சவுத்தி, மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட் யாருக்கு வெற்றி வாய்ப்பு: இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: கணிப்பிலேயே வென்ற நியூசிலாந்து..!
கிரிக்கெட் கல்லி ஃபேண்டஸி என்ற தளத்தில் உலகக் கோப்பை 2023இன் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: அதிரடியாக பறந்த சிக்ஸர்கள்..!
இந்த போட்டியில் இரு அணிகளின் சார்பிலும் மொத்தம் 14 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 8 சிக்ஸர்களும் இங்கிலாந்து 6 சிக்ஸர்களும் விளாசியது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: 150 ரன்களைக் கடந்த கான்வே
அறிமுக உலகக் கோப்பைப் போட்டியில் கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 152 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: பழி தீர்த்த நியூசிலாந்து..!
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக 2023ஆம் ஆண்டுல் உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: 150 ரன்களைக் கடந்த நியூசிலாந்து
அதிரடியாக ரன்கள் குவித்து வரும் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 129 ரன்கள் தேவை.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: இங்கிலாந்தை துவம்சம் செய்யும் இடது கை பேட்ஸ்மேன்கள்..!
கான்வே மற்றும் ரவீந்திரா கூட்டணியால் இங்கிலாந்து பந்து வீச்சு துவம்சம் ஆகி வருகிறது. இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ரன்கள் குவித்து வருகின்றனர்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: இங்கிலாந்துக்கு தலைவலி..!
நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து வரும் கான்வே மற்றும் ரவீந்திரா கூட்டணி இதுவரை அதாவது 14வது ஓவர் வரை 77 பந்துகளில் 101 ரன்கள் குவித்துள்ளது. இவர்கள் கூட்டணி தொடர்ந்தால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழை பொழியும் ரவீந்திரா..!
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் களமிறங்கியுள்ள ரவீந்திரா அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறார். இவர் இதுவரை 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: நெருக்கடியில் இங்கிலாந்து..!
இங்கிலாந்து அணியின் சொதப்பலான பந்து வீச்சினால் ரன்களை வாரி வழங்கி வருகிறது. நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: அடுத்தடுத்து இரண்டு ஓவர்கள் மெய்டனாக வீசிய சாம் கரன்..!
இங்கிலாந்து அணியின் சாம் கரன் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2வது மற்றும் 4வது ஓவரை வீசினார். இந்த இரண்டு ஓவர்களும் மெய்டனாக வீசி அசத்தியுள்ளார். இதில் 2வது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி வெற்றிகரமாக தனது உலகக்கோப்பைத் தொடரை தொடங்கியுள்ளார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக்கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து மற்றும் கனடா அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக உள்ளது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: லிவிங்ஸ்டன் அவுட்..!
இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன் தனது விக்கெட்டினை 22 பந்தில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: பட்லர் அவுட்.. நொருங்கும் இங்கிலாந்தின் நம்பிக்கை
இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் 43 பந்தில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: ரூட் அரைசதம்..!
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல சிறப்பான ஆடிவரும் ரூட் 57 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். உலகக் கோப்பை 2023இன் முதல் அரைசதம் இதுவாக பதிவாகியுள்ளது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: 5 ஓவர்கள் வீசி முடித்த போல்ட்..!
போட்டியில் ஒட்டு மொத்தமாக 28 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் போல்ட் மட்டும் 5 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் அவர் விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 33 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score: இதுவரை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள்..!
இதுவரை 27 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. இதில், 13 பவுண்டரி விளாசியதுடன் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Score:அதிரடியில் ஆட்டம் போட்ட ஹாரி புரூக் அவுட்..!
17வது ஓவரின் 3வது மற்றும் நான்காவது பந்தில் பவுண்டரிகளும் 5வது பந்தில் சிக்ஸரும் விளாசிய ஹாரி புரூக் கடைசி பந்தில் கேட்ச் ஆகி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் நிதானமாக விளையாடி வருகிறார். அந்த வகையில், 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE: ரசிகர்களுக்கு இலவச குடிநீர்..!
உலகக் கோப்பை 2023 முழுவதும் மைதானத்திற்குச் சென்று போட்டிகளை நேரடியாக பார்க்கும் ரசிகர்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Updates: இங்கிலாந்து அணி..!
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Updates: இந்திய சூழல் யாருக்கு கைகொடுக்கும்?
இந்திய தடவெப்ப சூழலில் இரண்டு நாட்டு வீரர்களும் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு ஐபிஎல் தொடர் ஏற்படுத்தி கொடுத்துள்ளதால், இது எந்த அணிக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Updates: அகமதாபாத்தில் மழைக்கு வாய்ப்பா?
இன்றைய போட்டியின் போது மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், போட்டியின் முடிவில் பனி ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன்கள் செயல்பட வேண்டியது அவசியம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Updates: இங்கிலாந்து vs நியூசிலாந்து விபரம்
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 95 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 44 முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் ட்ராவில் முடிய, 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Updates: பழி தீர்க்குமா நியூசிலாந்து அணி..
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்ற நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் மோதவுள்ள இரு அணிகளில் நியூசிலாந்து அணி பழி தீர்க்கும் முனைப்புடன் களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ODI World Cup 2023 ENG vs NZ LIVE Updates: ஸ்தம்பிக்கப்போகும் அகமதாபாத்..!
13வது கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திரமோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதனால் அகமதாபாத் முழுவதும் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கத்தை விடவும் அகமதாபாத் நகரம் நெரிசலுடன் காணப்படுகிறது.
ENG vs NZ LIVE Updates: 13வது உலகக்கோப்பைத் திருவிழா..!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசியுடன் இணைந்து நடத்தும் 13வது உலகக்கோப்பைத் திருவிழா இன்று முதல் அதாவது அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.