உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கான கடைசி வாய்ப்பிற்கான போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் நேற்று மோதியது.


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் அபாரமாக ஆடினார். ஆட்டத்தில் 24வது ஓவரை ஷதாப் கான் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை ஒயிடாக வீசினார். அப்போது, அந்த பந்தை ஸ்டோக்ஸ் வலது கைக்கு பேட்டை திருப்பி ஆட முயன்றார். ஆனாலும், பந்து பேட்டில் படாமல் மிகவும் கீழே இறங்கி சென்றது.






அப்போது, அந்த பந்தை விக்கெட் கீப்பர் ரிஸ்வான் தடுக்க முயன்றார். பந்து மிகவும் கீழே இறங்கிச் சென்றதால், ரிஸ்வான் தனது கால்களால் தடுக்க முயன்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இதுபோன்ற பந்துகளை தனது கால்கள் இரண்டையும் சேர்த்து தடுப்பார். தோனியை போலவே தடுக்க முயற்சித்த ரிஸ்வான் பந்தை தடுக்க முடியாமல் கோட்டை விட்டார். இதனால், அந்த பந்து பவுண்டரிக்குச் சென்றது.


உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான தோனியை இளம் விக்கெட் கீப்பர்கள் பலரும் தங்களது ரோல் மாடலாக கொண்டுள்ளனர். தோனியை போலவே முகமது ரிஸ்வானும் பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது முயற்சி எதுவும் இதுவுரை பலன் அளிக்கவில்லை என்றே சொல்லலாம். தோனி ஸ்டம்பை பார்க்காமலே ரன் அவுட் செய்வது போலவே, ரிஸ்வானும் ஒரு முறை முயற்சித்து அதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எதற்கு இதெல்லாம் என்பது போல பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ENG Vs PAK, Match Highlights: தொடரை வெற்றியுடன் முடித்த இங்கிலாந்து; 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்


மேலும் படிக்க: NED vs IND, WC 2023: சாம்பியன் டிராபிக்காக களமிறங்கும் நெதர்லாந்து.. கனவை உடைக்குமா இந்தியா.. இன்று மோதல்!