NZ vs AFG Score LIVE: ஆஃப்கான் அணியை ஊதித்தள்ளிய நியூசிலாந்து; 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
NZ vs AFG Score LIVE: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்த பிலீப்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்த பிலீப்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.
போட்டியின் 34வது ஓவரினை வீசிய ஃபர்குசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் ஆஃப்கான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகின்றது.
ஆஃப்கான் அணி 33.3 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து விளையாடி வருகின்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி 29வது ஓவரின் முதல் பந்தில் தனது 5வது விக்கெட்டினை இழந்து தத்தளிக்கிறது.
28 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது..
ஆஃப்கானிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி 26 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 24 ஓவர்களில் அந்த அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.
ஆஃப்கான் அணியின் அஸ்மத் தனது விக்கெட்டினை ட்ரெண்ட் போல்ட் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 32 பந்தில் 27 ரன்கள் சேர்த்திந்தார்.
ஆஃப்கான் அணி போட்டியின் 25வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்துள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 17வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்தது.
ஆஃப்கான் அணி 23 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் உள்ள அஸ்மத் மற்றும் ரஹ்மத் கூட்டணி 54 பந்துகளில் 36 ரன்கள்தான் எடுத்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணி வெற்றி பெற 30 ஓவர்களில் 222 ரன்கள் சேர்க்க வேண்டும்.
18 ஓவர்கள் வரை ஆஃப்கானிஸ்தான் தரப்பில் வெறும் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கான் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 59 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
ஃபர்குசன் வீசிய 14வது ஓவரின் கடைசிப் பந்தில் ஹஷ்மதுல்லா அடித்த பந்தை சாண்ட்னர் மிகச் சிறப்பாக பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ஆஃப்கான் அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்த போட்டியில் இதுவரை ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ள மேட் ஹென்றி இந்த தொடரில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தினை பிடித்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஃப்கான் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் தனது விக்கெட்டினை வேகப்பந்து வீச்சாளர் போல்ட்டிடம் இழந்து வெளியேறினார். தற்போது ஆஃப்கான் அணி பெரும் நெருக்கடியில் உள்ளது.
போட்டியின் 6வது ஓவரில் குர்பாஸ் தனது விக்கெட்டினை மேட் ஹென்றி பந்தில், இன் - சைடு எட்ஜ் மூலம் போல்ட் ஆகி வெளியேறினார்.
போட்டியின் 6வது ஓவரில் ஆஃப்கான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் ஆஃப்கான் அணியின் முதல் சிக்ஸரை லாங்-ஆஃப் திசையில் பறக்கவிட்டுள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 4வது ஓவரில் ஆஃப்கான் அணி தனது முதல் பவுண்டரியை விளாசியது. இந்த ஓவர் முடிவில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 2 ஓவர்கள் பந்து வீசி 6 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளது. இதில் 2 ரன்கள் வைய்டில் வந்தது.
முதல் ஓவரில் நியூசிலாந்து அணி தனது ரிவ்யூக்களில் ஒரு ரிவ்யூவை வீணடித்துள்ளது. குர்பாஸ் விக்கெட்டை கைப்பற்ற முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஃப்கான் அணி களமிறங்கியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணியின் கேப்டன் லாதம் தனது விக்கெட்டினை 48வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடிவந்த பிலிப்ஸ் தனது விக்கெட்டினை 80 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.
நியூசிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
போட்டியின் 47வது ஓவரில் டாம் லாதம் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுத்து வருகின்றார்.
சிறப்பாக விளையாடி வரும் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 67 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
போட்டியின் 45வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 45வது ஓவரில் பிலிப்ஸ் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்திட முயற்சி செய்துவருகிறார்.
நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ் லாதம் கூட்டணி 134 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை மொத்தம் 4 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர்.
நெருக்கடியான சூழலில் களமிறங்கிய பிலிப்ஸ் 69 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தினை விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றார்.
நியூசிலாந்து அணி 42.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் உள்ள பிலிப்ஸ் லாதம் கூட்டணி 125 பந்தில் 89 ரன்கள் சேர்த்துள்ளனர்.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
39 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்து மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டு வருகின்றது.
போட்டியின் 37வது ஓவரில் பிலிப்ஸ் 'அம்பையர்ஸ் கால்’ விதியின் மூலம் தனது விக்கெட்டினை இழக்காமல் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ரஷித் கானுக்கு இது மிகவும் ஏற்புடைய முடிவாக இருக்காது.
35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ப்லிப்ஸ் மற்றும் லாதம் கூட்டணி 76 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்த அணியை மெல்ல மெல்ல மீட்டு வருகின்றது.
நியூசிலாந்து அணி 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது.
31 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 20வது ஓவரில் ஒரு பவுண்டரி விளாசப்பட்ட பின்னர் போட்டியின் 29வது ஓவரில் பவுண்டரி விளாசப்பட்டுள்ளது. 10 ஓவர்கள் பவுண்டரியே விளாசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் 28வது ஓவரை வீசிய நபி அந்த ஓவரில் ரன் ஏதுவும் விட்டுக்கொடுக்காமல் அந்த ஓவரை மெய்டனாக வீசினார். அதேபோல் இந்த போட்டியில் இதுவரை இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி 28 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்களை நெருங்கியபோது நியூசிலாந்து அணி 5 ரன்களுக்கு மேல் ரன்ரேட் இருந்தது. இந்நிலையில் 26 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4.67ஆக ரன்ரேட் குறைந்துள்ளது.
25 ஓவர்கள் முடிந்துள்ளதால், தற்போது நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்து நிதானமான ரன்குவிப்பில் ஈடுப்பட்டு வருகின்றது.
போட்டியின் 21வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் யாங் ஆகியோர் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறனர். அந்த ஓவரை வீசிய ஹஷ்மதுல்லா ஒமர்சாய் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டினை வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணி 21வது ஓவரில் இரண்டு விக்கெடுகளும், 22வது ஓவரில் ஒரு விக்கெட்டும் இழந்து தற்போது சரிவினைச் சந்தித்துள்ளது.
போட்டியின் 21வது ஓவரை வீசிய ஹஷ்மதுல்லாவுக்கு அந்த ஓவர்தான் இந்த போட்டியில் இவரது முதல் ஓவர். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் விக்கெட் கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா ஆஃப்கானிஸ்தான் அணொயின் ஹஷ்மதுல்லா ஒமர்சாய் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் இருந்ததை விடவும் தற்போது அணியின் ரன்ரேட் சீராக உயர்துள்ளது. 19 ஓவர்களில் அந்த அணியின் ரன்ரேட் 5.53ஆக உள்ளது.
நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 98 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
58 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து யாங், அரைசதம் விளாசி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார்.
58 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து யாங், அரைசதம் விளாசி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார்.
58 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து யாங், அரைசதம் விளாசி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாங் 54 பந்தில் 48 ரன்கள் விளாசி அரைசதத்தினை நெருங்கி வருகின்றார்.
போட்டியின் 16வது ஓவரை வீசிவரும் ரஷித் கானுக்கு இந்த போட்டியில் இதுதான் முதல் ஓவர் ஆகும்.
15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 13வது ஓவரினை வீசிய நபியின் பந்து வீச்சில் வில் யாங் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிரட்டியுள்ளார். 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டினை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது நியூசிலாந்து அணியின் ரன்ரேட் 4.17ஆக உள்ளது.
11.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 11 ஒவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தற்போது 50 ரன்களை நெருங்கி வருகின்றது.
முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணியின் மூன்றாவது வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறங்கியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டெவின் கான்வே தனது விக்கெட்டினை 18 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். இவர் தனது விக்கெட்டினை முஜீப் பந்தில் இழந்தார்.
6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாங் இந்த போட்டியின் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
தொடக்கம் முதலே ஆஃப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சினை பயன்படுத்தி வருவதால் நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தினை ஆடி வருகின்றது. 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்துள்ளது.
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
உலகக் கோப்பையின் 16வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் ஆப்கானிஸ்தான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. நியூசிலாந்து தனது முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், இம்முறை சாம்பியன் பட்டத்தை வலுவாக வெல்வதாக செய்தியை கொடுத்துள்ளது. அதே சமயம், மோசமான தொடக்கத்துக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் அணி மீண்டும் வெற்றிக்கு திரும்பியுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம், எந்த சூழ்நிலையிலும் குறைத்து மதிப்பிட முடியாது என்ற செய்தியை ஆப்கானிஸ்தான் அளித்துள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கும், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
வீரர்களுக்கு ஏற்படும் காயம் நிற்காமல் இருப்பதுதான் நியூசிலாந்தின் மிகப்பெரிய பிரச்சனை. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பினார். ஆனால் ஒரு போட்டியில் விளையாடிய பிறகு கேன் வில்லியம்சன் மீண்டும் காயம் அடைந்தார். கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் இருந்து விலகுவது உறுதி. அணியின் தலைமை டாம் லாதம் கையில் இருக்கும். இது தவிர தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அணிக்கு திரும்புவார். இதுமட்டுமல்லாமல் ரச்சின் ரவீந்திராவுக்கு மீண்டும் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும். எனினும் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு சவுதி விளையாடுவாரா என்பதை தற்போது எதுவும் கூற முடியாது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறந்த ஃபார்மில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெரிய ஸ்கோரை அடித்தது. ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பலம் அதன் சுழற்பந்து வீச்சாளர்களான முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான். இருவரும் இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீச்சில் அற்புதங்களை செய்தது மட்டுமின்றி, மட்டையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கினர். இந்தப் போட்டியிலும் நூர் அகமது வெளியேற வேண்டியிருக்கும். முன்னாள் கேப்டன் முகமது நபியும் பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் முக்கிய பங்களிப்பை வழங்குவார் என்று ஆப்கானிஸ்தான் நம்புகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -