தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 13வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று நேருக்குநேர் சந்திக்க இருக்கின்றன. இந்த போட்டியானது சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.15 மணிக்கு தொடங்குகிறது. 


சேப்பாக்கம் - நெல்லை:


நெல்லை ராயல் கிங்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேசமயம், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.


டிஎன்பில் 2023 புள்ளிகள் அட்டவணையில் நெல்லை கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 3வது இடத்திலும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது. 


சேப்பாக்கத்திற்கு எதிரான போட்டியை நெல்லை அணி வெற்றிபெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புண்டு. 


பிட்ச் எப்படி..? 


சேலத்தில் உள்ள SCF கிரிக்கெட் மைதானத்தில் உள்ள டிராக் பந்துவீச்சுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது. மைதானத்தின் கடந்த கால சாதனையை கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச வேண்டும்.


நேருக்கு நேர் : 


இரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 5 முறையும், நெல்லை 2 முறையும் வென்றுள்ளது. 


கணிக்கப்பட்ட இரு அணி விவரம்: 


நெல்லை ராயல் கிங்ஸ்: பி சுகேந்திரன், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், அருண் கார்த்திக் (கேப்டன்), லக்ஷய் ஜெயின் எஸ், சோனு யாதவ், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), அஜித் குருசுவாமி, என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, சந்தீப் வாரியர், எஸ் மோகன் பிரசாத், ஸ்ரீ நெரஞ்சன் (இம்பேக்ட் வீரர் )


சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: என் ஜெகதீசன் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), சந்தோஷ் ஷிவ், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், உத்திரசாமி சசிதேவ், எஸ் ஹரிஷ் குமார், ராமலிங்கம் ரோஹித், ரஹில் ஷா, எம் சிலம்பரசன், ராக்கி பாஸ்கர், லோகேஷ் ராஜ், பிரதோஷ் பால் (இம்பேக்ட் வீரர்)


முழு அணி விவரம்: 


நெல்லை ராயல் கிங்ஸ் அணி: அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசுவாமி, ரித்திக் ஈஸ்வரன் (வ), சோனு யாதவ், பி சுகேந்திரன், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், லக்ஷய் ஜெயின் எஸ், ஹரிஷ், பொய்யாமொழி, சந்தீப் வாரியர், எஸ் மோகன் பிரசாத், ஸ்ரீ நெரஞ்சன், ஆர். மிதுன், எஸ்ஜே அருண் குமார், டி வீரமணி, கார்த்திக் மணிகண்டன், இம்மானுவேல் செரியன், என் கபிலன், ஆதித்யா அருண், நிதிஷ் ராஜகோபால், லட்சுமிநாராயணன் விக்னேஷ், அஸ்வின் கிறிஸ்ட்


சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி: சந்தோஷ் ஷிவ், என் ஜெகதீசன்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், எஸ் ஹரிஷ் குமார், உத்திரசாமி சசிதேவ், ராமலிங்கம் ரோஹித், லோகேஷ் ராஜ், ரஹில் ஷா, ராக்கி பாஸ்கர், எம் சிலம்பரசன், பிரதோஷ் பால், பி ஐயப்பன், ஆர் சிபி, எஸ் மதன் குமார், ராஜகோபால் சதீஷ், அருள்