Nobel Peace Prize 2025 Winner: நோபல் பரிசுகளிலே மிகவும் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நோபல் பரிசை பெறுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்தினார்.
ஆனால், அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக மரியான கொரினா மச்சோடாவிற்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருவதால் அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
யார் இவர்?
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாவின் முழுப்பெயர் மரியா கொரினா மசோடா பரிஸ்கா ஆகும். இவர் வெனிசுலா நாட்டில் முக்கியமான அரசியல் தலைவர் ஆவார். அடிப்படையில் இவர் பொறியாளர் ஆவார்.
1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்தவர். 2002ம் ஆண்டு முதல் அந்த நாட்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2002ம் ஆண்டு சுமதே என்ற அமைப்பை தொடங்கினார். பின்னர், வென்தே வெனிசுலா கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
சக்திவாய்ந்த பெண்:
2018ம் ஆண்டு பிபிசி பட்டியலிட்ட உலகின் மிகபும் பிரபலமான 100 பெண்களில் ஒருவராக இடம்பெற்றார். நடப்பாண்டில் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கான 100 பெண்களில் ஒருவராக இடம்பெற்றார். தொடர் செல்வாக்கு காரணமாக வெனிசுலா நாட்டின் அரசியலில் முக்கிய அங்கமாக மாறினார்.
போராட்டம்:
2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெனிசுலா அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட மரியா ஹென்ரிக்கிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2014ம் ஆண்டு வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தில், போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து நிகோலஸ் அரசுக்கு எதிராக போராடியதில் இவர் முதன்மையானவர்.
2023ம் ஆண்டு வென்தே வெனிசுலாவின் முதன்மை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு ஜுன் 30ம் தேதி வெனிசுலா நாட்டு தேர்தலில் போட்டியிட அவருக்கு 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பின்னர், அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அந்த தடையை உறுதி செய்தது.
மரியாவிற்கு பதிலாக கடந்த 2024ம் ஆண்டு கொரினா யோரிஸ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பின்னர் எட்மண்டோ மாற்றப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தி வால் ஸ்ட்ரீட் ஜார்னலில் எழுதிய கடிதம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.