அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிக்கான மக்கள் வருகை குறைவாக இருந்தது இணையத்தில் கருத்து தெரிவித்த நிலையில் விராட் கோலி இல்லாததே இதற்குக் காரணம் என்று பல ரசிகர்கள் கருத்து வருகின்றனர்
IND vs WI 2வது டெஸ்ட்:
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது, இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும், ஆனால் காலை 9:30 மணிக்கு ஆட்டம் தொடங்கியதால் பெரும்பாலான அரங்குகளில் மிகக் குறைந்த பார்வையாளர்களே காணப்பட்டனர்.
கோலி இல்லாத முதல் தொடர்:
இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலியின் இல்லாததை பல ரசிகர்கள் சுட்டிக்காட்டினர். கோலி ஓய்வு பெற்ற பிறகு சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
ரசிகர்களுக்கு கருத்து
பல ரசிகர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபிக்கு விராட் கோலி திரும்பியபோது அருண் ஜெட்லி மைதானம் நிரம்பிய வழிந்த காட்சிகளுடன் இந்த காட்சிகளை ஒப்பிட்டனர்.
விராட் கோலி டெல்லி டெஸ்டில் விளையாடவில்லையா? என் போனின் பேட்டரியை விட 1% காலியாக இருக்கிறது ஸ்டேண்டுகள்! அந்த கர்ஜனை எங்கே? உள்நாட்டுப் போட்டிகளிலிருந்து வருவாய் ஈட்டுவதற்காக விஜய் ஹசாரேவை ஏன் விளையாட வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்?
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள்தான் இந்திய அணியில் எப்போதும் பெரிய நட்சத்திரங்கள் இருந்தார்கள், சச்சின், தோனி, கங்குலி போன்றவர்கள் கூட்டத்தை இழுக்கும் வீரர்கள், பிசிசிஐ கில்லை சூப்பர் ஸ்டாராக்க முயற்சித்தது, ஆனால் அவர் ஒருபோதும் அப்படி ஆக முடியாது என்கிற விமர்சனத்தை ரசிகர்கள் எடுத்து வைத்தனர்
வ்ச்ஃப்
இருப்பினும், நாள் செல்லச் செல்ல கூட்டம் படிப்படியாக அதிகரித்து வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேற்கிந்திய தீவுகள் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மிகவும் வலுவான அணி இல்லை என்பதாலும், ரசிகர்கள் குறைவான அளவிறகு காரணமாக இருக்காலம் என்றும் சொல்லப்படுகிறது