2023-2024 ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே காலிறுதி ஆட்டத்தில் பரோடாவுக்கு எதிராக 11வது இடத்தில் பேட் செய்து சதம் அடித்து சாதனை படைத்தார். 


காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 384 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பரோடா அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 36 ரன்களுக்கு பின் தங்கியது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது. எனினும், 10வது விக்கெட்டுக்கு இணைந்த துஷார் தேஷ்பாண்டே மற்றும் தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா ஒரு சதத்துடன் 232 ரன்கள் குவித்து 600 ரன்களுக்கு மேல் அணியை கொண்டு சென்றனர். 






129 பந்துகளில் 120 ரன்கள் குவித்த தனுஷ் கோட்யான், 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசினார். 11 வது இடத்தில் பேட் செய்த துஷார் தேஷ்பாண்டே 129 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 123 ரன்கள் எடுத்தார். ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு இது இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இருவரும் வெறும் 1 ரன்னில் இரண்டாவது இடத்தை பிடித்தனர். 


1946ம் ஆண்டு ஓவல் ஸ்டேடியத்தில் சர்ரே மற்றும் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சந்துரு சர்வதே மற்றும் ஷூட் பானர்ஜி ஆகியோர் 10 மற்றும் 11வது இடத்தில் பேட் செய்து சதம் அடித்தனர். அப்போது அவர்கள் 233 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து, முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் 78 ஆண்டுகளில் முதல்முறையாக நம்பர்.10 மற்றும் நம்பர்.11 சதம் அடித்து துஷாரும் தனுஷும் புதிய  சாதனை படைத்தனர். 1946 இல், இந்திய வீரர்கள் சந்து சர்வதே மற்றும் ஷுட் பானர்ஜி ஆகியோர் சர்ரேக்கு எதிரான போட்டியில் 10 மற்றும் 11வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது சதம் அடித்தனர். இப்போது துஷாரும் தனுஷும் அதே சாதனையை செய்துள்ளனர்.


மேலும், 11வது இடத்தில் பேட்டிங் செய்த துஷார் தேஷ்பாண்டே முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 


11-வது இடத்தில் பேட்டிங் செய்து முதல்தர சதம் அடித்த இந்திய வீரர்கள்


123 – துஷார் தேஷ்பாண்டே vs பரோ, 2024
121 – ஷுட் பானர்ஜி vs சர்ரே, 1946
115 – வி சிவராமகிருஷ்ணன் vs டெல்லி, 2001


போட்டி சுருக்கம்: 


மும்பையில் உள்ள பிகேசி ஷதர் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி இன்னிங்ஸ் முன்னிலையுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. 


மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியில் அதிகபட்சமாக முஷீர் கான் 357 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 18 பவுண்டரிகளுடன் 203 ரன்களை எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் ஹர்திக் தாமோர் அரைசதமும், இரண்டாவது இன்னிங்சில் சதமும் அடித்தார். 93 பந்துகளை எதிர்கொண்ட ப்ரித்வி ஷா 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உதவியுடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். 


பரோடா அணி சார்பில் ஷஷ்வத் ராவத் முதல் இன்னிங்சில் 194 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்தார். கேப்டன் விஷ்ணு சோலங்கி 291 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார்.


606 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் போட்டியின் முடிவு டிரா ஆனது. இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற மும்பை அணி இறுதி நான்கு கட்டத்திற்குள் நுழைந்தது.