கரீபியன் ப்ரீமியர் லீக்:


கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்ற போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


அந்தவகையில் முதலில் பேட்டிங்கை தொடங்கியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜசன் ராய் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 9 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஜசன் ராய் 1 பவுண்டரி எடுத்து 6 ரன்களுடன் நடையைக்கட்டினார்.






அப்போது களத்தில் நின்ற சுனில் நரேனுடன் ஜோடி சேர்ந்தார் அந்த விக்கெட் கீப்பர் பேட்டரன நிகோலஸ் பூரன். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 97 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக மைக்கைல் லூயிஸ் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.


டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் தரப்பில் ஜோஷ்வா லிட்டில், சுனில் நரைன், வாக்கர் சலம்க்ஹெல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.  இந்த போட்டியில் மட்டும் 9 சிக்ஸர்களை பறக்க விட்டதன் மூலம் டி20 போட்டியில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை பறக்க விட்ட வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.


கெய்லின் சாதனையை முறியடித்த பூரன்:






அதாவது இளம் வீரரான நிகோலஸ் பூரன் இந்த ஆண்டு மட்டும் 139 சிக்ஸர்களை விளாசி உள்ளார். முன்னதாக கிறிஸ் கெய்ல் கடந்த 2015 ஆம் ஆண்டு 135 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார். அதற்கு முன்பு கடந்த 2012 ஆம் ஆண்டு 121 சிக்ஸர்களும், 2011 ஆம் ஆண்டில் 116 சிக்ஸர்களும், 2016 ஆம் ஆண்டு 112 சிக்ஸர்களும் விளாசி இருந்தார். இச்சூழலில் தான் நிகோலஸ் பூரன் இந்த சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் யாரும் இந்த சாதனை பட்டியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Yograj Singh:தோனியை தொடர்ந்து கபில் தேவை தாக்கிய யோக்ராஜ் சிங்! காரணம் என்ன?


மேலும் படிக்க: Harbhajan Singh: 2007, 2024 எந்த உலகக்கோப்பை சிறந்தது? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்